‘மூச்சு’

🌸🌸

‘எப்போதும் ஒருவித பயத்தோடே இருப்பேன். தூங்குவதற்கு மிகச் சிரமப்படுவேன். ‘மூச்சு’ ஆன்லைன் வகுப்பின் பயிற்சிகள் பெரும் மாறுதல்களைத் தந்துவிட்டது. நன்றாக மிக ஆழமாக தூங்குகிறேன். பாசிட்டிவாக லைவ்வாக இருக்கிறேன்! பரமன் சாருக்கு நன்றி!’

குத்தாலிங்கத்தை அழைத்து சொல்லியிருக்கிறார் ஒரு மாணவி.

‘அதே தியானம்தான். ஆனால் இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு வேற நிலை ஆழம்!’ என்று குறுஞ்செய்தியனுப்பியிருக்கிறார் மாணவியொருவர்.

உறக்கம், மனநிலை, வாழ்வை அணுகும் முறை என எல்லாமே மாறியுள்ளதாக மகிழ்ச்சியில் தகவல்களை அனுப்பிக் கொண்டுள்ளனர் ‘மூச்சு’ வகுப்பில் கலந்து கொண்டோர்.

மலர்ச்சியின் முதல் ஆன்லைன் கோர்ஸ், அதன் முதல் பேட்ச்! இருவார பயிற்சி வகுப்பு சென்ற வாரம் நிறைவடைந்தது.

மலர்ச்சி மாணவர்களல்லாதோர் சிலருக்கும் வாய்ப்பளித்தோம், ஆர்வத்தோடு அவர்கள் கேட்டதால்.
சிங்கப்பூர், பூனா, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சி, புதுச்சேரி, சென்னை என்று பரவலான ஊர்களிலிருந்து பயிற்சி பெற்றார்கள் மாணவர்கள். ஆழமான அடிப்படை மாறுதல்களைச் செய்து வியப்பிலாழ்த்தி வைத்திருக்கிறது ‘உயிர் வளர்க்கும் மூச்சு‘ – மலர்ச்சி ஆன்லைன் கோர்ஸ்.

ஒவ்வொருவருக்கும் மாறுதல்கள் கிடைத்ததென்றாலும், தொடர்ந்து பயிற்சிகளை செய்து கொண்டிருப்போர் ஆழமான பலன்களை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓர் ஆசிரியனாகக் கொண்டாடுகிறேன்.

வளர்ச்சிப்பாதையில் இணைவோம் விரைவில்.

🌸🌸

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    14.05.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *