அவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து

wp-15909467310222949242347805123501.jpg

குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு தனது ஆற்றலை வெளிக்கொணர நல்லதாய் எதையாவது செய்ய வேண்டும் என்று தவிக்கும் மகளிர்க்கு ஊக்கம் தந்து உதவி செய்து வழிகாட்டுவது உன்னதமான காரியம்.

மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கமும், அவள் விகடனும் சேர்ந்து நடத்தும் மகளிர்க்கான அப்படியானவொரு நிகழ்ச்சி ‘சிங்கப் பெண்ணே’. அந்த நிகழ்ச்சியில் தொழில் முனையும் மகளிர்க்கு ஊக்கமளிக்கவும் அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்து உந்தித் தள்ளவும் வாய்ப்பளித்தது வாழ்க்கை இன்று.

தொழில், சந்தை, ஆண் பெண் உறவு, எண்ண ஓட்டம், வெற்றி வழிகள் என சகலத்திலிருந்தும் கேள்விகளைக் கேட்டனர்.
நியாயமான யதார்த்தமான கேள்விகளைக் கேட்டனர் பலர். ஒரு மணி நேரம் என்று தொடங்கிய மலர்ச்சி உரை, இவர்களது ‘சந்தேகங்களைத் தீர்க்க கேள்வி பதில்’ என்ற பகுதியால் அரை மணி நேரம் கூடுதலாக பிடித்தது. 

இந்தப் பெண்கள் வெற்றி பெறட்டும், அவர்களது வாழ்வு நிலை உயரட்டும். எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்யட்டும்!

பிரார்த்தனைகள்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
31.05.2020

#Singappenney
#AvalVikatan
#Wewa
#Malarchi
#ParamanProgram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *