என் அடுக்ககத்தி்ற்கு வந்த கொரோனா போய்விடும்

என் அடுக்ககக் குடியிருப்பின் கீழ்த்தளத்திலிருப்பவருக்கு (நான் இருப்பது இரண்டாவது தளத்தில்) கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வீட்டிலுள்ளோருக்கு செய்த சோதனை முடிவில் அவர்கள் அனைவருக்கும் வந்து விட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

என் அடுக்கக் கட்டிடமே தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி சொல்லுகிறது.

தமிழகத்தில் குணமாவோரின் எண்ணிக்கை கணிசமான அளவிலேயே உள்ளது. இது வரை 40,000 பேர் குணமாகியுள்ளனர்.

குணமாகி வரட்டும் அவர். குணம் பெறட்டும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அவரது மனைவியும் பிள்ளைகளும்.

பிரார்த்தனைகள்!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    26.06.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *