பேய்கள் தோர்னமெண்ட்

பாத்ரூமிற்குள் நுழையும் போதெல்லாம் பித்தளை தாயக்கட்டைகள் உருளும் சத்தம் கேட்கிறது. முன்பெல்லாம் பிற்பகலில் மட்டுமே கேட்டது இப்போது பின்னிரவிலும் கேட்கிறது.

‘ஊரடங்கு காலம், வயது முதிர்வு வெளியே போகவேக் கூடாது என்று வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் எச்சரித்துள்ளதால்,  வீட்டிலேயே அடைந்து கிடங்கும் நேர் கீழ்த்தளத்துப் பெருசுகள் தாயக்கட்டைகளை எடுத்து விட்டது ஏப்ரலிலிருந்து. பழகப் பழக எல்லா நேரமும் ஆடி திளைக்கின்றன ‘ என்று எழுதலாம்.

‘இவங்க அந்த வீட்டை வாங்கி குடி வந்து ஒரு வருஷம்தான் ஆச்சாம். புள்ளாண்டன் அரிசோனால இருக்கானாம். வெளக்கு வச்சதுக்கு அப்புறம் அந்த வீட்டுல இருக்கற பெருசே அந்த அறைப் பக்கம் போறதில்லையாம். அந்த அறை எப்பயும் பூட்டித்தான் இருக்காம். பொழுது சாய்ஞ்சா ‘கலகலகல’ன்னு தாயக்கட்டை உருள்ற சத்தம் கேட்க ஆரம்பிக்குதாம். ராத்திரி முழுக்க தாயம் ஆடுற சத்தமும் யாரோ சிரிக்கற சத்தமும் கேட்டுட்டே இருக்காம்.  இதுக்கு முன்னாடி இருந்தவர் இவங்ககிட்டு வித்துட்டு போயிட்டாராம். இருட்டானதும் ராத்திரியில தாயம் உருளுதாம், சிரிப்பு சத்தம் கேக்குதாம்!’  என்றும் ‘விடாது கருப்பு’ வகையில் ‘பேய்கள் தோர்னமென்ட்’ என்று தலைப்பிட்டும் எழுதலாம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
27.06.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *