திறந்த வெளி உடற்பயிற்சி கூடங்கள்

தமிழகத்தில் போதிய இடவசதி உள்ள 147 பூங்காக்களில் திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க அனுமதி என்று ஒரு செய்தி வந்துள்ளது.  வேறு வேறு காலகட்டங்களில் நான் பயன்படுத்திய கோவை பந்தயச் சாலை திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடமும், பெங்களூரு பிடிஎம் லேஅவுட் பூங்காவும், சென்னை 28ன் மாநகராட்சி மைதான ‘டிப் பார்’ரும், சிங்கப்பூர் ஹோகாங்க் தெரு 11ன் திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடங்களும் மனதில் வந்து போகின்றன.

லெக் பிரஸ், ஹிப் ட்விஸ்ட், ஷோல்டர் பிரஸ், செஸ்ட் பிரஸ், புல் அப்ஸ், டிப் பார் வகை சாதனங்களும், யோகா செய்வதற்கென இட ஏற்பாடும் செய்யப்படுமாம். நல்ல முடிவு, இது முறையாக செயல்படுத்தப் பட்டால் நிறைய பேருக்கு மிக நல்ல பலன்களைக் கொடுக்கும்.

– பரமன் பச்சைமுத்து
05.09.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *