ஓர் ஆசிரியனுக்கான ஓர் உண்மையான பரிசு

IMG-20201017-WA0104.jpg

கவின்மொழியாலும் குத்தாலிங்கத்தாலும் பரிந்துரைக்கப்பட்டு மலர்ச்சிக்கு வந்த பெண்மணியா இவர் என வியக்கவே செய்கிறேன்.

மாதத்திற்கொரு முறை கண்ணீரும் கம்பளையுமாய் கவுன்சிலிங் வேண்டி மலர்ச்சி அலுவலக கதவை தட்டிய பெண்மணி, எந்த வகுப்புகள் நிகழ்ச்சிகள் வந்தாலும் மலர்ச்சியோடு கலந்து வாலண்ட்டியராகவும் வளர்ச்சி இதழோடும் பயணித்து அழகாக வளர்ந்து நிற்கிறார்.

சமீபத்திய 10 பேட்ச்களில் முழுமலர்ச்சி செய்தவர்கள், உங்கள் முழுமலர்ச்சி வகுப்புகளின் போது உணவு இடைவேளையில் உங்களுக்கு உணவு பரிமாறிய இந்த மலரவர் வனஜாவை நன்கு அறிவீர்கள்.

பள்ளி ஆசிரியை என்பதோடு ‘தொழில்முனைவோராக அடியெடுத்து வைக்கிறேன் பரமன், நீங்கள் சொன்ன ஒவ்வொன்னும் உள்ளேருந்து முளைச்சி இங்க வந்து நிக்கறேன் பரமன்! இன்னிக்கு என் பிறந்த நாள்!’ என்று வாழ்த்து வேண்டி வந்திருந்தார் மலரவள் வனஜா ( பேட்ச் 1, 25) இன்று மலர்ச்சி அகத்திற்கு.

உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் பூரிப்பு, மகிழ்ச்சி!

ஓர் ஆசிரியனுக்கு தனது வளர்ச்சியை அறிவிப்பதுதானே மிகச் சிறந்த பரிசு. அவ்வகையில் மலரவர் வனஜா தனது பிறந்த நாள் பரிசாக எனக்குத் தந்திருப்பது பெரும் பரிசு!

👏👏👏👏

வாழ்க! வளர்க!

மலரவள் வனஜா மேலும் மேலும் வளர இறைவன் துணை புரியட்டும்!

பிரார்த்தனைகளுடன்,

பரமன் பச்சைமுத்து
17.10.2020

🌸

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *