அடிக்கடி தேர்தல் வரட்டுமேயென்கிறது அடிமனது

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதிச் செலவை அரசே ஏற்கும், சுழல் முறையில் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர்.

இப்படியொன்று நடப்பதற்கு காரணமானவர் மு.க.ஸ்டாலின் என்பதை முன் வைத்தே ஆக வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என ஸ்டாலின் அறிவித்ததன் தொடர்ச்சியே, ‘அதை அரசே ஏற்கும், கூடவே ஹாஸ்டல் ஃபீஸையும் தந்துருவோம்!’ என்ற இந்த அறிவிப்பு.

தேர்தல் நேர இந்த பொறுப்பேற்புகளால் மாணவர்களும் அவர்கள் குடும்பங்களும் பயன் பெறுவார்கள். சாத்தியமில்லை என்றாலும் ‘ஆண்டுக்கொரு முறை தேர்தல் வந்தால் நல்லாயிருக்குமே!’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

  • மணக்குடி மண்டு
    22.11.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *