திருவண்ணாமலை வளர்ச்சிப்பாதை

கொரோனா தீ நுண்மிக் காலம் என்பதே தெரியாத அளவிற்கு எப்போதும் போல அரங்கை நிறைத்து வந்தமர்ந்திருந்தனர் மலரவர்கள் திருவண்ணாமலை வளர்ச்சிப் பாதைக்கு. கூடுதலாக அனைவரும் சுவாசக்கவசம் அணிந்திருந்தனர்.  ஆண்டாள் சிங்காரவேலர் அரங்கின் நீள் வடிவ அமைப்பு தனி்நபர் இடைவெளிக்கு மிக உகந்ததாக அமைந்திருந்தது.

சென்னை வளர்ச்சிப்பாதையில் பதிவு செய்து இடம் பிடிக்க முடியாமல் நேராக திருவண்ணாமலை வந்த மலரவர், புதுச்சேரியிலிருந்து வள்ளிமோட்டார்ஸ் செந்தில், அனுசுசீலா என வெளியூர் மலரவர்களும் வந்திருந்தனர்.

இரண்டு மணி நேர வளர்ச்சிப்பாதை, சிவகுமார் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டி பதினைந்து நிமிடம் கூடுதலாகி நிறைந்தது. ‘எக்ஸ்ட்ரா டைம் எக்ஸ்ட்ரா போனஸ் எக்ஸ்ட்ரா ஹேப்பி எக்ஸ்ட்ரா எனர்ஜி!’ என்று இரவு உணவின் போது மகிழ்ந்து சொல்லிக்கொண்டிருந்தார் மலரவள் ஒருவர்.

12.12.2020 அன்று வளர்ச்சிப்பாதைக்கு வந்திருந்த திருவண்ணாமலை மலரவர்கள் பலர் முக்கிய முடிவுகள் சில எடுத்திருப்பர்,  இதோ இப்போது ஒரு புது உத்வேகத்தோடு இயங்கிக் கொண்டிருப்பர் என்பது உறுதி.

‘சார்… இதெல்லாம் முடிக்கனும்தான். ஆனா, தள்ளிப் போட்ருர்றேன். அதனால நம்ம நிறுவனத்துக்கே வேலை கூடுது. வளர்ச்சிப்பாதை என்னை அறைஞ்சிடுச்சி! இன்னைக்கு முடிவு பண்ணிட்டேன். பிடிக்குதோ பிடிக்கலையோ தள்ளிப் போடாம, வேலையை முடிக்கனும்னு முடிவு பண்ணிட்டேன்’ என்றாள் இளம் நங்கையான மலரவள் ஒருவள். 

அவரின் பகிர்வறிந்து பூரிப்பில்  தொழில்முனைவரான ஒரு மலரவர் சொன்னார், ‘போதுமே! பத்தாயிரம் ரூபாய் செலவு பண்ணியிருந்தாலும் கூட இந்த ஒரு வளர்ச்சி, இந்த ஒரு கருத்து உள்ள போயிருக்குமாங்கறது சந்தேகந்தான். ஒரு வளர்ச்சிப்பாதை ஒரு ஆழமான மாற்றத்தை தந்துடுதே! எவ்ளோ நல்லது எல்லாருக்கும்!’

பத்து மாதங்களுக்குப் பிறகு வந்த நேரடி வளர்ச்சிப்பாதைக்கு திருவண்ணாமலை தாகத்தோடு காத்திருந்தது தெரிந்தது.  எவ்வளவுதான் இணைய தொழில்நுட்பம் வழியே நேரலை தந்தாலும், நேரடியாக வகுப்பில் வந்தமர்ந்து அனுபவிக்கும் வகுப்பும் அந்த மலர்ச்சி அனுபவமும் வேறுதான், இது பல மடங்கு உயர்ந்தது என்பது அனுபவப் பூர்வமாகப் புரிந்தது.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
14.12.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *