சில கதவுகள் திறக்கின்றன

பரமன் ரெண்டு நிமிஷம் பேசனும். உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும்!’ என்று அழைத்த மலரவன், சென்னை பெருநகரை தூய்மையாக வைத்திருக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தின் உயர்நிலை இரண்டாம் கட்ட பொறுப்பு அதிகாரி.

‘சொல்லுங்க! ஆமாம் இன்னைக்கு வீட்லதான் இருக்கேன். சொல்லுங்க!’

‘எங்க ஜோன்ல துப்புறவு பணியாளர் வேலைகள் காலி இருந்துச்சி. அதுக்கு,  மேல பேசி ட்ரான்ஸ்ஜென்டர செலக்ட் பண்ணி அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன் பரமன்! அதில ஒருத்தர் 80 பர்சண்ட் வாங்கி டிகிரி முடிச்சிருக்காங்க பரமன்! ஃபீலிங் வொண்டர்ஃபுல் பரமன்!’

பேசி முடித்து அழைப்பு துண்டித்த பின்னரும், உணர்வு இன்னும் வழிந்து கொண்டேதான் இருக்கிறது.  உடல் தன்மையைக் காட்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, வழியேயில்லாமல் பாலியியல் செயல்களுக்கும் பிச்சை எடுப்பதற்கும் சென்ற சிலர் தங்களை நிரூபித்துக் காட்ட ஒரு வழி திறக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றும் என சில கதவுகள் எப்போதாவது திறக்கின்றன இவர்களுக்கு. சரியாக செயல்பட்டு உயரட்டும் இவர்கள். இதன் மூலம் பெருங்கதவுகள் திறக்கட்டும்.

நல்ல சிந்தனை கொண்டோர் உயர் பொறுப்பில் உட்காரும் போது நல்ல செயல்கள் தொடக்கம் பெறுகின்றன.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
14.12.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *