ஏவிசிசி – பெங்களூரு மீட்

Bengaluru – Meet

நண்பர்களை சந்திப்பது போல எதுவுமில்லை உலகில். அதுவும் கல்லூரியில் ஒன்றாய்ப் படித்த வகுப்புத் தோழர்களை, தோழிகளை!

பெங்களூரு ஹெச்எஸ்ஸார் லேஅவுட்டில் மலர்ச்சி மாணவரின் நிறுவனத்தி்ன் புதிய கிளையொன்றை திறந்து வைக்க வர இருப்பதால், நண்பர்களை செல்லிடப்பேசியில் அழைத்து ‘சந்திக்கலாமா?’ என்று கேட்டிருந்தேன்.

மூவரும் ‘நிச்சயமாக!’ என்றார்கள்.

அதிகாலை நான் விமானத்திலிருக்கும் போதே ‘வெல்கம் டு பேங்களூர்’ என்று வரவேற்று வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பிய பாலமுருகன் முதலில் வந்து மகிழ்வூட்டினார் (பேசிக்கா ஏர்ஃபோர்ஸ் ஆளு இல்லையா!)

வரும் போதே எங்கள் அனைவருக்கும் உறையிடப்பட்டு ‘ஹேப்பி நியூ இயர்’ என கையால் எழுதப்பட்ட பரிசோடு வந்தார் பாலமுருகன்.

பால முருகனிடமிருந்து கற்க நிறைய உள்ளது.

……

பக்கா ஃபார்மலில் பூச்செண்டோடு வந்து மகிழ்வித்து மகிழ்ந்த முரளிக்கு நன்றி.

முரளி நாராயணன் உடல் சோர்வுடன் இருந்தாலும், நலம் குன்றியிருந்தாலும் எழுந்து வந்து சந்தித்து அளவளாவிப் போனது நெகிழ்ச்சியைத் தந்தது. தந்தையின் மறைவுக்குப் பின் உடல் எடை குறைந்துள்ளது முரளிக்கு.

முரளியிடம் கற்றவை பல இன்று.

…..

தனது வகுப்புத் தோழர்களை சந்திக்க போகும் போது தன் குட்டி மகளையும் அழைத்து வந்து ( அருள்நாதனைப் போல) அசத்தினார் அருள்மொழி.

பூக்களோடு கூடிய செடியை பரிசாகத் தந்து அசத்திய அந்தக் குட்டிப் பெண்ணை அள்ளிக்கொண்டேன்.

ஏவிசிசிபி டிப்ளோமா முடித்து இஞ்சினியரிங் முடித்து அதன் பின் எம்டெக் முடித்த அருள்மொழி, சிஸ்கோ அங்கு இங்கு என்று சுற்றி யூனிசிஸ்ஸில் இருக்கிறார் இப்போது. ஆமாம், பாலமுருகனும் அருள்மொழியும் ஒரே நிறுவனத்தில் வெவ்வேறு பிரிவுகளில் இருக்கிறார்கள்.

பாலமுருகனின் மகன் பெருமைப்பட வைத்தான், முரளி தனது மகன்களைப் பற்றி பேசியதில் கற்றவை அதிகம். அருள்மொழியிடமிருந்து நிறைய அறிந்து கொண்டோம்.

அகமதாபாத்தில் வசித்த காலத்தில் கட்டிடங்கள் குலுங்க ஏற்பட்ட நிலநடுக்கத்தை கண்டதில் பெற்ற அனுபவத்தை பாலமுருகன் பகிர்ந்தது ‘ஓ…ஆவ்! யெப்பா!’ அனுபவம்.

அருள்மொழி, நம் ‘வளர்ச்சி’ இதழை சிலாகித்து படிப்பதையும் அதிலிருந்து பெற்ற மாற்றங்களையும் பகிர்ந்த்து, ‘லைஃப் வொர்த்டா மவனே!’ மொமன்ட்ஸ்.

முத்துராமன், ஜெயஸ்ரீ, உமா்மகேஸ்வரி, கோடி, பிரபாகர், செந்தில் நாதன் ‘காச்சூ மெமரி’… தில்லையாடி சுரேஷ், கனகராஜ், வனிதா வீட்டு ரோஜா செடிகள், கல்லூரி கால சைக்கிள் பயணங்கள், நாம் வழக்கமாக வகுப்பில் உட்காரும் பெஞ்ச் உடன் உட்காருவோர்… என கல்லூரி காலத்தைய நினைவுகளையும் மீட்டெடுத்தோம்.

நாகார்ஜூனாவின் ஆந்திரா சூப்பர் மீல்ஸை ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்ந்து பிரிந்தோம்.

நல்ல அனுபவம்.

நேரம் போனது தெரியவில்லை.

  • பரமன் பச்சைமுத்து
    பெங்களூரு
    11.01.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *