‘Taken 3’ – Movie review

Taken3 - Copy

Taken3 - Copy

திரைக்கதை சரியாய் இருந்தால் யார் நடித்தாலும் படம் மின்னும், சரியான பாத்திரத்தில் கூடவே, சரியான ஆளும் அமைந்தால்…பட்டையைக் கிளப்பும். அதுதான் நடக்கிறது இப்படத்தில்.

‘போர்ன் ஐடென்டிடி, சுப்ரிமசி’ வரிசை படங்களுக்கப்புறம், ‘இப்படி ஒரு ஆக்ஷன் படம் பார்த்து எவ்வளவு நாளாச்சி!’ என்று நினைக்கச் செய்யும் படம்.

மகளுக்காக எதையும், எதையுமென்றால் எதையும் செய்யும், முந்தைய ‘டேக்கன்’ வரிசை முன்னாள் ஸி.ஐ.ஏ அப்பா, உணர்ச்சி, சாகசங்கள், திருப்பங்கள் என கலந்து கட்டி அடிக்கும் கதைதான். இன்னும் சுவராசியமாய் இருக்கிறது. பிரையன் மில்ல்ஸ் பாத்திரம் அவ்வளவு பிடித்துப் போய், இந்தப் படத்தின் முந்தைய படங்களைப் பார்க்கத் தோன்றுகிறது.

கண்டிப்பாய், நல்ல திரையரங்கில் பாருங்கள்.

டேக்கன் 3 : ஆக்ஷன் அமர்க்களம்

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *