ரீல் ஹீரோ vs ரியல் ஹீரோ!

Nadigar Vishal 2

Nadigar Vishal

முப்பதாண்டுகளாக நடிகர் சங்கம் தன் வசம் என்று வைத்திருந்த ராதாரவியை, அரசியல் ஆள் பலமுள்ள கிட்டத்தட்ட அசைக்கமுடியாத சக்தியாக இருந்த சரத்குமாரை, இளம் விஷால் அணி வீழ்த்தியிருப்பது விழி விரியச்செய்கிறது.

தனிப்பட்ட நபர்களை குறிவைத்துத் தாக்குதல், வாக்குப் பதிவின் போது நடந்த தள்ளு முள்ளு, ‘கமல்ஹாசனால என் பேண்ட்ட கூட கழட்ட முடியாது’ என்று ராதாரவி அடித்த கமெண்ட்களையெல்லாம் தவிர்த்திருக்கலாம் (முன்னமே நாம் பதிவிட்டிருந்ததைப் போல!).

இதையெல்லாம் தேர்தல் உற்சாக வேக மிகுதியால் வந்த வெறியில் நடந்தவை என்று எடுத்துக் கொண்டு, நடக்க வேண்டியதை பார்க்க வேண்டும்.

‘அவர்களின் குறைகளில் கவனம் செலுத்தாமல் இனி செய்ய வேண்டியது பற்றி சிந்திப்போம்’ என்று நாசர் சொன்னதும்,
‘இரு அணி முடிந்து ஓரணியாக செயல்படுவோம்’ என்ற சரத்குமார் தரப்பு சொன்னதும் நன்று.

இந்த நடிகர் சங்கத் தேர்தலில் இதையெல்லாம் கடந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது.

பெருந்தலைகளை எதிர்த்து, எடுத்த செயலுக்காக தன்னைத் தந்து ஊர் ஊராக சென்று விளக்கி உழைத்து, பெரும் தாக்குதல்களை எதிர்கொண்டு, களத்தில் இறங்கி அஞ்சாமல் நின்று அமைதியாய் வென்றிருக்கும் விஷால் ஒரு ஆளுமையைத் தாண்டி ஒரு தலைவனாய் உருவாகி நிற்கிறார்.

‘பாய்ஞ்சா நான் புலி, நீ ஆயிடுவே பலி’ என்று திரையில் அஞ்சாமல் பஞ்ச் விடும் பல ரீல் ஹீரோக்களுக்கு நடுவில் (கருத்து சொல்லக் கூட பயப்படும்!), நிஜமாக செயலில் இறங்கி களத்தில் நின்று வென்று காட்டிய ரியல் ஹீரோ விஷால்.

‘கமல் ஆதரவு இருந்ததாலதான் பாண்டவர் அணி வெற்றி’ என்று பல பத்திரிக்கைகள் எழுதும். எழுதட்டும். துணிவோடு ஒருவன் இறங்கி நின்றதால்தான் கமல் ஆதரவு தந்தார் என்பதுதான் அடிப்படை உண்மை.

திரையில் வசனம் பேசிவிட்டு ஓடி ஒளியும் ஹீரோக்களுக்கு இடையில் நிமிர்ந்து நிற்கும் விஷால் ஒரு நிஜ ஹீரோ!

2 Comments

  1. Uma

    Happy about vishal!

    Reply
  2. Muthu

    Thanks Paraman for a wonderful comment. I congratulate Vishal for his success and mean time Tamil film industry is again going to a Non-Tamilan because our tmail teams non-co operative and split in to different teams.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *