விஜயதசமியாம்…

wpid-20151022_120149.jpg

அப்போதெல்லாம் விஜயதசமியில் பள்ளியில் சேர்ப்பார்கள். ‘பர்த் சர்ட்டிஃபிகேட்ஸ்’ எல்லாம் இல்லாத அந்நாளில், கையை தலைக்கு மேல் வைத்து காதைத் தொடச் சொல்வார்கள். அப்படித் தொட்டால், ஐந்து வயதென்பது அப்போதைய கணக்கு.
ஒண்ணாம் வகுப்பில் உட்கார வைத்து ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா…’ ஆரம்பித்து விடுவார்கள் (டீச்சர் கிள்றான் டீச்சர் எல்லாம் அப்புறம்!)

ஒரு விஜயதசமி நாளில்தான் நான் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். நிலா வடிவ ஆரஞ்சு மிட்டாய் நிறைய வாங்கித் தந்தார்கள்.

ஒரு விஜயதசமி நாளில்தான் பெங்களூர் அம்பேத்கார் பவனில் நான் ட்ரெயினராக அறிவிக்கப்பட்டேன்.

விஜயதசமியாம் இன்று!

ஓசூரில் வகுப்பெடுத்து விட்டு சென்னை நோக்கிப் பயணிக்கிறேன், கூடவே பழைய நினைவுகளை நோக்கியும்!

 

wpid-20151022_120149.jpg

பரமன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *