ஒவ்வொரு சமூகத்தின் பின்னேயும்…

கேரளத்தில் மன்னர்களுக்கும் கோவில் விக்கரகங்களுக்கும் பல்லக்குத் தூக்கும் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த அந்த சமூகத்தின் அந்நாளைய வலியை, அவர்களது பெண்டிர்களை அடிமையாக்க நடந்த துயரங்களை, அதிலிருந்து மீண்டெழுந்து நின்ற கதையை உணர்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் மலர்ச்சி மாணவர் ஒருவரின் தந்தை அவர்களது கடைக்கு நான் சென்றிருந்த போது.

நாடார்கள் வணங்கும் பெரியாண்டவர் பற்றி விவரித்தார் அவர்.

‘சாணர்கள்’ என்ற பெயரில் இழிநிலையில் வைக்கப்பட்டிருந்த அவர்களை கோயிலுக்குள் வரவழைக்க பெரும் போராட்டம் கொண்ட காந்தியைப் பற்றி காமராஜைப் பற்றி, ஜெயமோகன் சிலாகித்தெழுதும் நேசமணி பற்றியெல்லாம் பேச ஆசை வந்தாலும், எதையும் பேசாமல் கேட்டுக் கொண்டேன்.

ஒவ்வொரு சமூகத்தின் பின்னேயும் வலியும் துயரங்களுமடர்ந்த கடந்து வந்த பாதையும், ஒரு நூறு கதைகளும் இருக்கின்றன.

பரமன் பச்சைமுத்து
13.09.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *