சூழலியல் என்பது…

வாசல் திருத்தி கோலமிடுவதென்பது மங்களமென்பதற்காக மட்டுமல்ல, பல்லுயிர்ப்பெருக்கத்திற்காகவும். தனது வீட்டைச் சுற்றி வாழும் உயிர்களை காக்கும் கடமை தனதென்று பொறுப்பேற்றுக் கொள்ளும் செயல்.

பெண்மகளிட்ட கோலத்தில் கணவன் கால் பட்டால் தாலி தழைக்குமென்ற வகை ஆணாதிக்க இட்டுக்கதைகளைத் தாண்டி
ஈக்கும், எறும்புக்கும், காக்கைக்கும், அணிலுக்கும் உணவிடும் உன்னதம். ‘வயிற்றிற்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்!’ என்பதன் செயல் வடிவம்.

சூழலியல் என்பது தானும் வாழ்ந்து தன்னுடன் இருக்கும் உயிர்களுக்கும் உதவுவது.

பக்கத்து டவுனில் இருக்கும் பெரிய கடைகளில் காய்கறி பலசரக்கு வாங்கப் புறப்பட்ட மலர்ச்சி மாணவர் காதர் மொய்தீனிடம் அவரது தந்தை சொன்னாராம், ‘இரு… நம்ம வீட்டுப் பக்கத்தில இருக்கற கடைங்கள்லதான் நாம பொருள் வாங்கனும். நம்மள நம்பிதானே அவங்கள்லாம் வியாபாரம் தொடங்கியிருக்காங்க! அவங்கள்லாம் என்ன செய்வாங்க!’

பரமன் பச்சைமுத்து
மணக்குடி
07.02.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *