பரமன், நீங்கள் சித்த – ஆயுர்வேத மருத்துவத்தை அதிகம் பரிந்துரைப்பதாக ஓர் எண்ணம்

 

கேள்வி: பரமன், நீங்கள் சித்த – ஆயுர்வேத மருத்துவத்தை அதிகம் பரிந்துரைப்பதாக ஓர் எண்ணம் (வளர்ச்சி இதழில் வரும் கட்டுரைகளில் உட்பட). நீங்கள் ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவரா?

பரமன்: ஆங்கில மருத்துவத்திற்கு எதிரானவன் அல்ல என்பதை முதலில் தெளிவு படுத்திவிடுகிறேன். இரண்டு நிகழ்வுகளை பகிர்கிறேன்.

நிகழ்வு – 1:

படிப்பதற்கு கண்ணாடி அணியும் என்னை ‘பரமன், இங்க ஒரு இடம் இருக்கு. ட்ராப்ஸ் மூலமே கண் குறைபாடுகளை சரி செய்றாங்க. எனக்கு தெரிஞ்ச ஒருத்தவங்களுக்கு சரியாயிடிச்சி. நீங்க வாங்க!’ என்று இழுத்துக் கொண்டு போனார் மலர்ச்சி உறுப்பினர் தனுஜா.

கேரளாவிலிருந்து மாதத்தில் ஒரு நாள் சென்னை வரும் அந்த ஆயுர்வேத நம்பூதிரி மருத்துவரைப் போய் பார்த்தோம். என் கண்களை பரிசோதித்த பின்னர் ஒரு நாளைக்கு இரு முறை என கண்களில் இட்டுக் கொள்ள இரண்ணு சொட்டு மருந்துகளை பரிந்துரைத்து, ‘இத ர்ர்ரெண்டு மாசம் போடு. அப்பறம் வா, பார்ப்பம்’ என்ற மலையாளத் தமிழில் சொல்லியணுப்பினார். காலை மாலையென தினமும் தவறாமல் மருந்து விட்டதில் அதிசயித்தேன் நான். கண் பிரகாசமாக ஆனதாக ஒரு உணர்வு வந்தது முதலில். ‘பிரமை’ என்றெண்ணி விலக்கினேன். போகப் போக கண்கள் ஒளி பெற்று புத்துணர்வு பெற்றன. கண்களை இடுக்கிப் பார்க்கும் தேவை தானாகவே ஒழிந்தது. பார்க்கும் விதம் மாறியது.

அறுபத்தியிரண்டு்நாட்கள் மருந்திட்டு திரும்பவும் அவரிடம் போனேன். கண்களின் பவர் ஒரு பாயிண்ட் அளவு குறைந்திருக்கிறது என்றது பரிசோதனை முடிவு. இன்னும் சில சூரணங்களையும் நெய் மருந்தையும் உட்கொள்ள தந்திருக்கிறார் நம்பூதிரி மருத்துவர். இன்னும் படிக்க கண்ணாடிதான் பயன்படுத்துகிறேன் என்றாலும் கண் பொலிவடைந்திருக்கிறது. இணையத்தில்
Www.sreedhareeyam.com என்ற முகவரிக்குப் போய் விவரங்களை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

இதைத் தொடர்ந்தால் கண்கள் பூரண குணமடையலாம்,
கண்ணாடியின்றியே படிக்குமளவிற்கு கண்கள் சீரடைய இன்னும் காலமெடுக்கலாம். ஆனால் என் கண்கள் பொலிவு பெறுகின்றன என்பது உண்மை.

நிகழ்வு – 2:

எழுபத்தியாறு வயதான எனது தந்தை நோய் வாய் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்று கேள்வியுற்று ஊருக்கு விரைகிறேன். ‘சலைன்’ ஏறும் நிலையில் படுக்கையில் இருந்தார் அவர். சில நாட்கள் மருத்துவம் பார்த்து பிறகு ரத்த அழுத்தம் வந்து விட்டது என்று கணித்தார்கள். இனி தினமும் அதற்கான மாத்திரைகளை விழுங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு பரிந்துரை சீட்டோடு வீட்டுற்கு அனுப்பப் பட்டார். மருந்து மாத்திரையே உட்கொள்ளாத கிராமத்து மனிதரான அவருக்கு ‘தினமும் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரை’ என்பது கொஞ்சம் சிந்திக்க வைக்கவே, அவரை அழைத்துக் கொண்டு சித்த மருத்துவரிடம் வந்தோம்.

வயிற்றில் சீரண மண்டலம் சரியாக இயங்கவில்லை. வயது மற்றும் வேறு சில காரணங்களால் பாதிக்கப் பட்டிருக்கிறது என்று கூறிய சித்த மருத்துவர், செரிமான மண்டலத்திற்கான மருந்துகளை பரிந்துரை செய்து ஒரு மாதம் எடுத்துக் கொள்ளச் செய்தார். ஒரு மாதம் தொடர்ந்து எடுத்ததில் வயிறு சரியாகியது. ரத்த அழுத்தம் இல்லாமல் போனது. அப்புறம் எதற்குமே மருந்து சாப்பிடவில்லை என் அப்பா.

ரத்த அழுத்தம் எதனால் என்று கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ததில் ரத்த அழுத்தமே இல்லாமல் போனது. இதைச் செய்யாமல் தினமும் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று தொடர்ந்திருந்தால்..? அதனால் ஏற்படும் பக்க விளைவுகள்?
(மருந்து வேலை செய்து உடல் பூரண குணம் ஆனதும் அதீத உற்சாகம் கொண்டு உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டு அதிகதூர பயணம் செய்வது, போகுமிடங்களில் உண்டு வயிற்றைக்கெடுத்துக் கொள்வது என காரியங்களை அவ்வப்போது அவர் நிகழ்த்துவது தனி கதை)

அவர் பூரண குணமடைந்து உடல்நிலை சீரானதும், சித்த மருத்துவர் நாகராஜனை அழைத்து ‘சார்… அப்பா, சுத்தமா குணமாயிட்டார்! நன்றி!’ என்றேன்.

‘அட… சித்தர்கள் சொன்ன மருந்துகள், மருத்துவம். இதன் பாராட்டு அவங்களுக்கு!’ என்றார்.

#வளர்ச்சி-பதில்கள்
#வளர்ச்சி-சுய-முன்னேற்ற-இதழ்

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *