நாம் வைத்த கன்றொன்று நம் கண் முன்னேயே வளர்ந்து நிற்பதைக் காணுமனுபவம் அலாதியானது

நாம் வைத்த கன்றொன்று நம் கண் முன்னேயே நெடுநெடுவென்று வளர்ந்து நிற்பதை பார்க்குமனுபவம் அலாதியானது. ஒரு பச்சிளம் குழந்தையைப் போல நம் கைகளில் தவழ்ந்த கன்று இன்று வேரூன்றி வளர்ந்து தலை(தழை)யசைப்பதைக் காண்கையில், தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும் பிள்ளையைப் பார்க்கும் தகப்பனைப் போன்றொரு கிளர்ச்சி வருகிறது.

நகரையே நாசம் செய்த வர்தாப் புயலின் மீது வந்த உணர்ச்சியால் மலர்ச்சி மாணவர்களோடு ஓராண்டுக்கு முன்பு வைத்த மரக்கன்றுகளிலொன்று இந்த அரசன். எந்த ஊருக்கு நான் பயணித்தாலும் எந்த தேசத்தில் நான் இருந்தாலும் இந்த நகரின் நட்ட நடுவில் கிளை பரப்பி தழைத்து நிற்கும் இந்த மண்ணில் என் பந்தம்.

‘குட்டி… நீ வளர்றியா?’ என்று இவனிடம் இனி கேட்க வேண்டியிராது. காலை அலுவலகம் வரும் போதும், மாலை காரிலேறிக் கிளம்பும் போதும் இவனைப் பார்த்து வெறுமனே சிரித்தால் போதும். இனி இம்மரத்தில் காக்கைகள் இளைப்பாறும், குருவிகள் விளையாடும். அணில்கள் வரக்கூடும்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை,
04.07.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *