Fury – Movie review : Paraman Pachaimuthu

Fury

Fury

A Super scene – Movie Clip here – CLICK HERE to see VIDEO

‘கொள்கையாவது, குடைமிளகாயாவது, உயிர்தான் முக்கியம். கொல்லப்படாமல் இருக்க, கொல்வது முக்கியம்’ என்று எதிலும் பிடிப்பில்லாமல் மூர்க்கமாய் போர்த்தொழில் புரிந்து வாழும் ஒரு குழுவிற்குள்,
‘இதெல்லாம் என் கொள்கைக்கு எதிரானவை, செய்யமாட்டேன். என்னை வேண்டுமானால் கொன்று போடு. கொல்லமாட்டேன். கொள்கையை விட மாட்டேன்,’ என்று வரைமுறைகள் வைத்து வாழும் ஒருவன் வந்து சேர,
நடந்தேறும் நிகழ்வுகளில் எல்லாமே மாறிப்போய், கொலைவெறி குழுவிற்கு பிடிப்பு வந்து கொள்கைக்காக உயிர் விடுவதும், ‘கொள்கை! கொள்கை! கொல்லமாட்டேன்,’ என்றவன் கொள்கையைத் தூக்கிப் போட்டுவிட்டு கொன்று குவிப்பதுமாயும் முடியும் போர்க்கள கதை. மனதைத் தொடும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.

போர்க்களத்து வாழ்க்கையை பொட்டிலடித்தாற்போல் சொல்லியிருக்கிறார்கள்.
எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கலாம்!

ஃப்யூரி – நல்ல நாவல் படித்த திருப்தி

– பரமன் பச்சைமுத்து

3 Comments

  1. Poornima Neethu

    Awesome review!
    I liked the movie too..

    Reply
  2. gulshan

    Awesome review.

    I will watch now for sure.

    Reply
  3. sathish

    Till then reading review, i did not got the drive to see the movie , but now i wanted to see the movie, let me plan…

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *