வேள்பாரி

காக்கா விரிச்சி, குலநாகினி, ஆட்கொல்லி விதை, கொடிகுலத்து வள்ளி, வேளிர் குலத்து மகள், குறிஞ்சி நிலத் தலைவன், காடறியும் ஆசான், கார்த்திகை நட்சத்திரங்கள், தேவவாக்கு விலங்கு, கொற்றவை கூத்து, துடும்பு, நட்பின் கபிலர், நாகரக்கரடு, விரலிமேடு, பகழியம்பு, சுருளம்பு, மூவிலைவேல், செங்கனச்சோழன், குலசேகரப்பாண்டியன், உதியஞ்சேரல், காடர்கள், திரையர்கள், கூவல்குடியினர், தந்தமுத்துக்காரர்கள், தட்டியங்காட்டுப் போர் என ஈராண்டுகளாக பச்சைமலைத் தொடருக்கு என்னைத் தூக்கிப் போய் வேள்பாரியோடு கூடவே இருத்தி உடன் பயணிக்க வைத்து சு. வெங்கடேசன் செய்தது ஒரு வகை மாயம். தந்தது ஒரு பேரனுபவம்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த பாரியே போரிலிறங்கும் முக்கிய தருணங்களை வேகமாகத் தாண்டிப் போகும் விதத்தைப் படிக்கும் வேளையில், திடீரென்று முடிக்கிறாரோவென்றும் ஓர் எண்ணம் வருகிறது. டிசம்பருக்குள் முடித்தால்தான் ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நூலாக படைக்க முடியும் என்ற எண்ணமோ என்னவோ.

#VelPari
#AnandaVikatan

– பரமன் பச்சைமுத்து
சென்னை
23.11.2028

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *