பாரதி விருது – தினமணி அசத்தல்

பாரதியின் பெயரால் ஒரு விருது வேண்டும், பாரதியைப் பற்றி ஆய்வு செய்வோர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அவ்விருதையும், ஒரு லட்சம் ரூபாயும் அளித்து வெகுமதி செய்ய வேண்டும் என்று கவியரசு கண்ணதாசன் கண்ட பாரதி கனவு இத்தனையாண்டுகள் கழித்து இன்று மெய்ப்பட்டிருக்கிறது.

‘மேல் நாடுகளில் ஷெல்லிக்கு ஒரு கூட்டமென்றால், ஷேக்ஸ்பியருக்கு ஒரு கூட்டமென்றால் மக்கள் கூட்டம் வருகிறது. திருவள்ளுவருக்கு கூட்டம் வைக்கிறேன் யாரும் வரவில்லை!’ என்று வருந்திய பாரதியின் பிறந்த நாளிலாவது எட்டயபுரத்திற்கு வருவோரில்லையே என்று வருந்தி ஒவ்வோர் ஆண்டும் தமிழார்வளர்களை, வாசகர்களை எட்டயபுரத்திற்கு வரவழைத்த தினமணி கி. வைத்தியநாதன், இனி அது தொடரும் என்று சொல்லும் வகையில் ‘தினமணியின் ஆண்டுதோறும் ‘பாரதி விருது’ பாரதி பிறந்த நாளில்’ என்று ஏற்பாடு செய்து விட்டார். அறிஞர் பெருமக்களைக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகள், உரை, பாரதி பற்றிய புத்தகங்கள் விற்பனை என்று தமிழக கவர்னர் தலைமையில் களைகட்டுகிறது பாரதி பிறந்த நாள் எட்டையபுரத்தில். அருமையான சங்கதி!

தொடரட்டும் இந்த நல்ல செயல்!

முன்பொரு ஆண்டில் இதே பாரதி பிறந்த நாளில்தான் ஒரு தமிழ்ப்பத்திரிக்கையின் ஆசிரியனாக ஆனேன் நான்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
11.12. 2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *