வாஞ்சி மணியாச்சி

நூற்றியெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ரயில்நிலையத்தில்தான் புரட்சி செய்தான் வாஞ்சி.திருநெல்வேலியிலிருந்து கொடைக்கானலுக்கு முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த பிரித்தானிய கலெக்டர் ஆஷ்ஷை, இதே மணியாச்சி ரயில் நிலைய மேடையில் உலாத்தியபடியே கவனித்து துப்பாக்கியை எடுத்து சுட்டுக் கொன்றான் புரட்சியாளன் வாஞ்சி.வெகுகாலத்திற்குப் பிறகு மணியாச்சி ரயில் நிலையத்தை ‘வாஞ்சி மணியாச்சி’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று குமரி அனந்தன் கோரிக்கை வைக்க, அப்போதைய பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தி நிறைவேற்றி வைத்தாராம்.தூத்துக்குடியில் புறப்பட்ட ரயில் வாஞ்சி மணியாச்சியில் இரண்டு நிமிடமே நிற்கும் என்றார்கள். ‘ஒரு நிமிடமேனும் இறங்கிப் பார்க்க வேண்டும் அந்த மண்ணில்! ட.ரெயின் புறப்பட்டால் ஓடிப் போய் ஏறுவோம்!’ என்று இறங்கி நின்றேன்.- பரமன் பச்சைமுத்துவாஞ்சி மணியாச்சி29.09.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *