சன்னல்கொத்தி

இரண்டு நாட்களுக்கு முன்பு என் பால்கனிக்கு வெளியே மாமரக்கிளையை கொத்திய மரங்கொத்தி, இன்று காலை என் அடுக்கக் குடியிருப்பின் மூன்றாம் தளத்து வீடொன்றின் சன்னலைக் கொத்தியது. ‘அப்பா… அப்பா, அங்க பாரு!’ என்று என் மகள் அன்று காட்டிய போது மாட்டாத அந்த மஞ்சள் அழகி, இன்று காலை ஓட்டப்பயிற்சி முடித்துவிட்டு வந்து பாதாம் மரத்தடியில் அமர்ந்த போது க்ளிக்கில் மாட்டியது.

பளீரென்று மலர்ச்சி மஞ்சளில் (மஸ்டர்டு எல்லோ) உடல், கருப்பும் கரும்பழுப்புமான இறக்கை விளிம்பு, தலையில் ஒரு கிரீடம் வைத்தது போல சிவப்புக் கொண்டை என அட்டகாச வண்ணக் கலவையில் மரங்கொத்தி.

அன்று பார்த்த போது எழுந்த கேள்வியோடு இன்று புதிதாயும் சில கேள்விகள்.

‘இரண்டு நாள் முன்பு பார்த்த அதே மரங்கொத்தியா அல்லது இந்த சன்னல்கொத்தி வேறு மரங்கொத்தியா?’

‘இந்தப் பறவைகளுக்கு எவர் இப்படியொரு பளிச்சென்ற உடையை உடுத்தி விடுவது!’

– பரமன் பச்சைமுத்து
சென்னை
06.11.2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *