இந்தூரில் தொடங்கிய அதிசயம் இந்தியாவெங்கும் நிகழட்டும்!

அதிசயங்கள் பல நேரங்களில் சாமானியர்களால் நிகழ்த்தப் படுகின்றன.

ஒரு மாவட்ட ஆட்சியரும் அவரது அத்தனை ஊழியர்களும், நகரின் மாநகராட்சி ஆனையரும் அவரது அனைத்துப் பணியாளர்களும் வாரத்தில் ஒரு நாள் தங்களது வாகனங்களைப் பயன்படுத்தாமல் அரசுப் பேருந்தில் மட்டுமே பயணிப்போம் என்று முடிவெடுத்து செயல்படுத்தினால் எப்படியிருக்கும்!
மக்களும் இணைவார்கள்தானே!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் வாரத்தில் வெள்ளிக்கிழமைதோரும் பொதுத்துறை வாகனங்களில் மட்டுமே பயணிப்பது என்று முடிவெடுத்து செயல்படுகிறார்கள் அரசு அதிகாரிகள். சங்கதியறிந்து நிறைய பொதுமக்களும் வெள்ளியன்று தங்கள் வாகனங்களை பயன்படுத்துவதில்லையாம். பேருந்துகளில் பயணிக்கிறார்களாம். தாங்களும் ஆதரவளிப்பதாகக் கூறி பல ஆட்டோ சங்கங்கள் டாக்ஸி சங்கங்கள் கூடுமானவரை முன் வந்துள்ளனவாம்.

ஒலி மாசுவும் வளி மாசுவும் குறைந்துள்ளதாகவும், நகரில் நேரியம் கூடியுள்ளதாகவும் பகிர்கிறார்கள் இந்தூர் நகரவாசிகள்.

எல்லோருக்கும் மாறவும் நல்லதை நோக்கி நகரவும் ஆசை இருக்கிறது. எங்கு தொடங்குவது, எவர் முன்னெடுப்பது என்பதில் நின்று விடல் நடக்கிறது. முன்னெடுத்து செயல்படுத்திய மாவட்ட ஆட்சியரையும், நகராட்சி ஆனையரையும் அவர்களது் பணியாளர்களையும் எழுந்து நின்று பாராட்டுகிறோம்.

இந்தூரில், ஆறே மாதங்களில் 13 லட்சம் குப்பைகளை மறுசுழற்சி செய்து 400 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டு சுற்றுச் சூழலுக்கு நன்மை செய்தது இதே நிர்வாகம்தான்.

2016ல் தூய்மைப் பட்டியலில் 149வது இடத்தில் இருந்த இந்தூர் நகரம், இரண்டாண்டுகளாக இந்திவிலேயே தூய்மையில் முதல் இடம் என்று நிற்கிறது. (தமிழகத்தின் திருச்சி மூன்றாவது இடம்!) மொத்த இந்தியாவும் இந்தியாவைத் திரும்பிப் பார்க்கிறது.

இந்தூரின் அந்த அதிகாரிகளைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது. பூங்கொத்து கொடுக்க ஆசையாக உள்ளது.

இந்தூரில் தொடங்கிய மாற்றம் இந்தியாவெங்கும் பரவட்டும்.

இப்படிப்பட்ட அதிகாரிகளும் ஒத்துழைக்கும் ஊழியர்களும் இருந்தால், மக்களும் நிச்சயம் கைகோர்ப்பார்கள், மாற்றங்கள் நிகழும். இந்தூர் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும்….
மலர்ச்சி வணக்கம்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
04.12. 2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *