‘கொரோனா தடுப்பூசி – எம்எம்ஆர் போதுமாம்!’

கொரோனா தீ நுண்மி தடுப்பூசிக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்திருக்கிறது.

‘கோவாக்சின்’ ஊசியும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் தடுப்பூசியும் மக்கள் மீது சோதனை என்ற கட்டத்தில் இருக்க, மருத்துவ உலகம் நமக்கு ஏற்கனவே பழக்கமான ஒரு தடுப்பூசியை சொல்லி கட்டை விரலை உயர்த்துகிறது. 

தட்டம்மை, அம்மைக்கட்டு, ரூபெல்லா எனப்படும் ஜெர்மன் தட்டம்மைக்காக இதுவரை குழந்தைகளுக்குப் போடப்பட்ட முத்தடுப்பு ஊசி (எம்எம்ஆர் – மீஸில்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) கொரோனா தீ நுண்மிகளை எதிர்த்து இயங்கும் தடுப்பாற்றலை தருகிறதாம்.

50 ஆண்டுகளாக நம்மூரில் (உலகெங்கும்) குழந்தைகளுக்குப் போடப்பட்டு வருவதால் நடைமுறையில் இருப்பதால், இந்த தடுப்பூசி ஏற்கனவே நன்கு பழக்கமானது (பாதுகாப்பானது) பக்க விளைவு பற்றி கள ஆய்வு தேவை இல்லை என்கின்றார்களாம் மருத்துவ குழுவினர்.

கரோனா தடுப்பில் முதல் நிலையில் இருக்கும் மருத்துவர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கும், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கும் இந்த தடுப்பூசியைக் கட்டாயமாக்கலாம் என்கிறார் மருத்துவர் கு. கணேசன்.
செலவு குறைந்த இந்த ஊசியை ஒரு மாத இடைவெளியில் இரு தவணைகளாக போட்டுக் கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கிறார் அவர்.

– பரமன் பச்சைமுத்து
27.07.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *