திறந்திருக்க வேண்டாம் திரையரங்குகளை

மெரீனா கடற்கரை, தி நகர் ரெங்கநாதன் தெரு என பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது.

பள்ளிகள் 16ஆம் தேதியிலிருந்து  திறக்கலாம், புறநகர் ரயில்கள் ஓடலாம் என்பனவும் தளர்வுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. அரக்கோணத்திலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்தும் இல்லாமல் புறநகர் ரயில்களும் இல்லாமல் தவித்த சிறு குறு வியாபாரிகளுக்கு இது நற்செய்தி. பள்ளிகளைப் பொறுத்த வரை கவனித்து நிதானமாகவே அனுப்புவர் பெற்றோர்.

10ஆந் தேதியிலிருந்தே திரையரங்குகள் திறக்கலாம் என்ற உத்தரவு வியக்க வைக்கிறது. 100 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி இருக்கும் அதே நேரத்தில் திரையரங்குகள் திறக்கலாம் என்பது இடிக்கிறது. 

தீபாவளி் ரிலீஸ் படங்களுக்காக அவசரமாக தளர்வு தந்திருப்பது தெரிகிறது.  50% இருக்கைகள் மட்டுமே நிரப்பப் பட வேண்டும், குளிரூட்டல் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே நடக்க வேண்டும் போன்ற விதிகள் கடைபிடிக்கப்படுமா என்பவை சந்தேகமே.

போட்ட முதலை முதல் மூன்று நாட்களில் எடுக்கவே பார்க்கும் அவர்கள், 50% இருக்கையை மட்டுமே நிரப்புவார்களா? டிக்கெட் விலையையும் ஏகத்துக்கு உயர்த்தி அதிக இருக்கைகளை நிரப்பினால்… !

ஓணம் பண்டிகைக்காக செய்யப்பட்ட தளர்வே கேரளத்தில் இரண்டாம் அலை கொரோனா தொற்றிற்கு காரணமாக இருந்துள்ளது.

தபிழகத்திற்கு, இந்த தீபாவளி திரையரங்கத் தளர்வுகளை  இப்போது  செய்திருக்க வேண்டாம்.

– பரமன் பச்சைமுத்து
02.11.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *