மலர்ச்சி வகுப்பில் நேரடியாய் அமர்ந்து அமிழ்வது ஓரனுபவம்!

சோகம், வலி, ஏமாற்றம் என்று
அழுகையில் பல்வேறு வகைகள் உண்டு.  தனக்கு நேர்ந்ததை நினைவு கூர்ந்து உணர்ந்து வருவது ஒரு வகை அழுகை.  தனக்கு எதுவும் நடக்காத போதிலும், நல் ஆழமான உணர்ச்சியின் மிகுதியாக பொசுக்கென வெளிப்படும் நேரிய அழுகை பிறிதொரு வகை.

இவ்விரு வகையும் உணரப்பட்டது சென்ற சனிக்கிழமை ‘வளர்ச்சிப்பாதை’யில். உறவுகள் பற்றிய வளர்ச்சிப்பாதை சிலரை அவர்கள் வாழ்வோடு உணர வைத்து அழச் செய்தது. ஒப்பிட தங்களுக்கு எந்த கடந்தகால சிக்கலும் இல்லாத போதும் கூட, உறவுகள் பற்றிய புதிய புரிதலும் புதிய ஆழமுமே சிலரை பீறிட்டு அழ வைத்துவிட்டது. 

உணர்ச்சிகள் கையாளும் முறை, உறவுகளில் ஏற்படும் சிக்கல்களின் பல நிலை விளக்கங்கள் என சனிக்கிழமை வளர்ச்சிப்பாதை வந்தவர்களை தைத்தது.

தனிநபர் இடைவெளி, சுவாசக்கவசம் என பாதுகாப்பு விதிமுறைகளுக்குட்பட்டு நடந்தது. ‘மலர்ச்சி ஆசிரியரோடு மலர்ச்சி மகாமுத்ரா அனுபவம்’ இல்லை என்பது மலரவர்களுக்கு குறைதான் என்றாலும், மலர்ச்சி வகுப்பில் நேரடியாய் அமர்ந்து அமிழ்ந்து உணர்வது என்பதே வேறு நிலை அனுபவம்தானே! இறைவனருளால் அதைப்பெற்றோம்!

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
சென்னை
24.11.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *