மக்கள், பல்லுயிர் சூழல் முக்கியமல்லவா!

மத்திய அமைச்சர் தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு ஒன்றாக இணைந்து அவர்களது உணவை கரண்டியால் கிளறியும் உண்டும் மகிழ்கிறார். இரண்டு சட்டங்களை மாற்ற ஒத்துக்கொண்டிருக்கிறார் என்றும் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதென்றும், அடுத்த கட்ட பேச்சு வார்த்தை சில நாட்களில் தொடரும் என்றும் இன்று ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

‘விவசாயிகள்… விவசாயிகள்!’ என்று உணர்ச்சி வசப்பட்டவர்கள் சிலர் அமைதியாயிருப்பர். அமைச்சர் தோமர் –  அடிச்சாம்பாரு அப்பாயிண்ட்மெண்ட் கார்ப்பரேட்டுக்கு’ ‘நிலத்தை கார்ப்பரேட் புடுங்கிக்கும்! அவ்ளோதான்!’ என்ற வகையில் உண்மையல்லாத உணர்ச்சிப் பெருக்கு மீம்ஸ்களைப் பகிர்ந்த சிலர் ‘ஐயயோ, பிரச்சினை முடிஞ்சிருச்சா! ச்சே!’ என்று வருந்துவர்.

நடுநிலைவாதிகள் என்று நிற்பவர்களுக்கு என் கேள்வி.  ஒரு சட்டத்தை நீக்குவதன் / சமரசம் செய்வதன் மூலம் தவறு நிகழ்ந்திருக்கிறதே. ஏன் குரல் தரவில்லை.

அறுவடை முடிந்த வயல்களின் தாள்களையும் தோகைகளையும் தீ வைத்துக் கொளுத்துவதால் பெரும் வளி மாசு ஏற்படுகிறது. தில்லியில் மூச்சு விடமுடியாத நிலை வந்து பள்ளிகள் விடுமுறை விடுவற்கு இது பெரிய காரணம் என்று பல ஆண்டுகளாக சொல்லப்படுகிறது. சூழலியல் ஆர்வலர்கள் கூவிக் கூவி பார்க்கிறார்கள். தில்லியின் முதலைமைச்சர் இதற்காக குரல் கொடுத்தார். அரசிடமிருந்து எரிக்காமல் அதை தகனப்படுத்த அறிவியல் வழிமுறைகள் கூறப்பட்டன. என்ன சொன்னாலும் கேட்காமல், ‘அதெல்லாம் செய்ய முடியாது, நாங்க இப்படித்தான் பண்ணுவோம்!’ என்று தீ வைத்து கொளுத்திய பஞ்சாப், ஹரியானா விவசாயிகளுக்கு புதிய சட்டத்தில் ‘ தீ வைச்சால்.. ஃபைன் கட்டு!’ என்றது மத்திய அரசு.

பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் எதிர்த்த 3 சட்டங்களில் ஒன்று ‘தீ வைத்தால் அபராதம் போடக்கூடாது’ என்பதுதான்.  ‘நாங்க எரிப்போம், சூழல் பற்றி, மாசு பற்றி,்அடுத்தவங்க மூச்சு திணறல்ல சாகறத பத்தி எங்களுக்கு கவலை இல்லை!’ என்ற போக்கில் நின்ற அவர்களது நிலைக்கு ‘விவசாயிகள்… விவசாயிகள்!’ என்று அரசியல் செய்தவர்களும்,  ஒரு விவரமும் புரியாமல் குதித்து உணர்ச்சி வசப்பட்டவர்களும் ஆதரித்து குரல் கொடுத்தனர்.

இதோ… அந்த சட்டத்தை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு. அரசின் தவறான முடிவு இது.

இனி… எரிப்பார்கள். பல்லாயிரம் ஹெக்டேர்களை எரிப்பார்கள். வளி மாசு வரும். முதியவர்கள் மூச்ணுத்திணறலில் சாவார்கள். பறவைகளும் சூழலும் துன்புறும். மனிதர்கள் நோய் கொள்வார்கள்.

அரசு இதை திரும்பப் பெற்றிருக்க வேண்டாம். ஒரு வேளை தீ வைத்துக் கொளுத்துவதற்கு பதிலாக  மாற்று வழிகள் அவர்களுக்கு தரப்படும் என்றால் அது நல்லதே!

அறிவியல் துறையினர் இறங்கி உதவட்டும். மக்கள், பல்லுயிர் சூழல் எல்லாவற்றையும் விட முக்கியமானவை.

வாழ்க!

– மணக்குடி மண்டு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *