பெருமாள் கவுண்டர்

🌸

மூப்பின் அல்சைமர் மறதி நோய்

முடங்கிப் படுக்கையிலேயே வாழ்க்கை

முதுகில் ‘பெட் சோர்’ புண்கள்

முடிந்தது எல்லாம்
பெருமாள் கவுண்டருக்கு

உடலின் சிறுமை உடைத்து
உயிரின் சுதந்திரம் இனி

புன்னை பூலை
மலர்கள் இட்டே
மகள்கள் வழியனுப்ப

தலைமழித்த மகன் ராமு
தந்தையை ஏந்திச் சென்றார்

கணப்பொழுதில் அஸ்தியானவரை
கரைத்தாயிற்று காவிரியில்

காலையில் இறந்த கவுண்டருக்கு
கருக்கலில் கருமாதியும் முடித்தாயிற்று
காக்காய்க்கு சோறும் இட்டாயிற்று
காதில் ஒலிக்கிறது
கடைசி சந்திப்பின் அவரது குரல் மட்டும்

‘ஏய் ராமு, பரமன் உன் ஃப்ரெண்டு இல்ல, என் ஃப்ரெண்டு!’

‘சம்பாவுக்கும் குறுவைக்கும் என்ன டிஃப்ரன்ஸ், பரமன் சொல்லுங்க பாப்போம்!’

நினைவு தப்பிய நோயில் வீழ்ந்த அவர் நீங்கி விட்டார்
நினைவுகளை விலக்க முடியாமல் நிற்கிறேன் கரூரில் நான்!

தான் தோன்றிமலை பெருமாள் தாளில்
பெருமாள் கவுண்டர் தஞ்சமடைய பிரார்த்தனைகள்!

  • பரமன் பச்சைமுத்து
    கரூர்
    03.03.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *