மாடு துன்பப் படக்கூடாது, மனிதன் துன்பப்படலாமா?: பரமன் பச்சைமுத்து

மாட்டிறைச்சி உண்டார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை, மற்ற சிலர் கூடி அடித்துத் தாக்கியுள்ளனர். இடம்,
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை. தாக்கப் பட்டவர் ரஷீத் என்னும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர். தாக்கியவர்கள், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவனை, அவ்வளவு பேர் முன்னிலையில் கூடி அடிப்பது மிருகச் செயல். மாட்டை காக்க முயற்சித்து, மனிதனை மாட்டை அடிப்பது போல் அடித்திருக்கும் கொடூரம்.

மாட்டிறைச்சி விஷயத்தில் மோடி வாய் திறக்கவில்லை என்பதற்காக,
தங்களது சாகித்ய அகாதெமி விருதுகளை திருப்பித் தந்திருக்கிறார்கள் நயன்தாரா ஷேகல் மற்றும் வாஜ்பாய் ஆகியோர். அவர் வாய் திறக்கட்டும் அல்லது திறக்காமல் போகட்டும்.

மாடு துன்பப் படுவதை தடுக்க இறங்கி, மனிதர்களை துன்புறுத்தும் கேவலம் இது. கண்டிக்கப் பட வேண்டிய விஷயம் இது.

– பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *