கருந்துளைகளைத் தாண்டி கணக்கிட முடியா பெரியவன்’ :

image

அறிவியல் உலகம் ஆர்ப்பரிக்கிறது. ஊடகங்கள் உற்சாகத் தலைப்புகளிட்டு செய்திகள் தருகின்றன.
வானியல் அறிவியலில் அடுத்த கட்டம் இது என்கிறார் டேவிட் ரிட்ஸ், லிகோ அமைப்பின் திட்ட செயல் இயக்குநர் (லேசர் இன்ட்டெர்ஃபெரோமீட்டர் க்ராவிடேஷனல்-வேவ் ஆப்சர்வேட்டரி).

இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம் நினைவுக்கு வருகிறது சிலருக்கு.
‘சூரியனைப் போன்று 29 மற்றும் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே மோதிப் பிணைந்துள்ளன. அந்த நிகழ்வால் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை இப்போது கண்டுபிடித்துள்ளோம். அந்த ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பிரபஞ்சத்தின் கீச்சுக்குரல் போல் வெளிப்பட்டிருக்கின்றன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கணிப்பு சரியானதுதான்’ என்று பரவசப்படுகிறார் விஞ்ஞானி டேவிட்.

வின்வெளியில் சூரியனைப் போன்று மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன. அவை தங்கள் வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக மாறும். அவை ஒன்றையொன்று சுற்றும் போது அண்டவெளியில் அதிர்வுகள் ஏற்பட்டு அவை ஈர்ப்பு கவர்ச்சி அலைகளாக வெளியாகும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் கணித்துச் சொன்ன ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கருத்தை இன்று உண்மைதான் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கருந்துளைகள்  ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பற்றி கண்டுபிடித்தது பெரிய விஷயம், இதைப் பற்றி அன்றே சொன்னவன் பெரிய ஆள் என்று பார்க்கப்படுகிறான்.

கருந்துளைகளைப் பற்றி கண்டுபிடித்தவனே பெரியவன் என்றால், வின்மீன்களிலிருந்து அந்த கருந்துளைகளை உருவாக்குபவன்…?

:பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *