வேறுவழியின்றி முன்னேறியே செல்ல வேண்டும்!

mani 1

mani 1

நீங்கள் பார்க்கும் இந்த வேலையில் இருக்கும் கஷ்டங்கள் என்ன?’  இந்த கேள்வியை உங்கள் முன் வைத்தால் என்ன பதில் சொல்வீர்கள் நீங்கள்?

இந்தக் கேள்வியை முன்னால் வைத்தால் பொதுவான உலகம் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

 அய்யய்யய்யோஅத ஏன் கேக்கறீங்க? மனுஷன் செத்து சுன்னாம்பா ஆவறேன் இங்கே!’ என்று ஆரம்பித்து அடுத்த இரண்டு நாட்களுக்குஇது கஷ்டம், அது கஷ்டம்என்று புலம்பித் தள்ளும் மக்கள் இருக்கிறார்கள். ‘தோ இவங்கள வச்சிட்டு எது செய்யறதும் கஷ்டம்என்று ஊழியர்களை சுட்டிக் காட்டுவார்கள் சிலர்.  சாமியேவ்இங்க வாழறதே கஷ்டம் சாமீய்!’ ‘கையில பணம் இல்லாம தொழில் பண்ணிட்டு பொருள குடுத்திட்டு அப்புறம் இவங்க கிட்ட போயி வீடு வீடா வசூலிக்க நிக்கறது இருக்கே அது கஷ்டம் சார்!’ என வேலைகளின் கஷ்டங்களைப் பற்றிய பட்டியல்கள் ஆளாளுக்கு வேறுபடும். நீளும்.

இன்பத்தில் துன்பம்துன்பத்தில் இன்பம்இறைவன் வகுத்த நீதிஎன்ற கண்ணதாசனின் பாடல், ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்னும் பாரதிதாசனின் பாடல், ‘துன்பம் வரும் வேளையில் சிரிஎன்ற ஆசான் வள்ளுவனின் வரி என சிந்தனையாளர்கள் அனைவரும் நம்முன் வைக்கும் ஒரு விஷயம் வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் நிறைந்ததே  கஷ்டங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. கஷ்டங்கள் இல்லாமல் ஏற்றங்கள் இல்லை என்று துன்பத்தை எப்படிக் கையாள வேண்டும் எப்படிப் பார்க்கவேண்டும் என்று துன்பம் குறித்த ஒரு சிறந்த பார்வையை நமக்குத் தந்து விட்டுப் போயிருக்கிறார்கள். 

இவற்றையே மண்டைக்குள் வைத்து அலையும் நம்மை,  பொடேர்என்று தலையில் தட்டிஇத இப்படிப் பார்க்கலாமே!’ என்று வியக்க வைத்து விடுகிறார்கள் சில சாமானிய மனிதர்கள். 

வாழ்க்கை மிக வித்தியாசமானது. சிக்கலான பிரச்சினைக்கான தீர்வை மிக மிக எளிமையான ஒன்றாகவே வைத்துள்ளது அது.  சிக்கலான விஷயங்களில் புகுந்து சிந்தித்து வெளிவரும் மனிதர்களுக்கு எளிமைப் பார்வை விடுபட்டுப் போகிறது. எளிமையாக வாழும் சாமானிய மனிதர்கள் இதுபற்றி அதிகம் சிந்திக்காமல் சட்டென்று புரிந்து சிக்கலைத் தாண்டி நகர்ந்து விடுகிறார்கள்.  சாமானிய மனிதர்கள் உண்மையில் சமூகத்திற்கு அதிகம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.  போகிற போக்கில் அவர்கள் சொல்லிப் போகிற சில விஷயங்கள் பெரிய வாழ்வியல் பாடங்களாக இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

அப்படியொரு சாமானிய மனிதர் மணி.  சென்னை நகரின் அண்ணாநகர்திருமங்கலம் அண்ணாநகர் மேற்கு பகுதிகளில் இருக்கும் வீடுகளில் அதிகாலையில்  செய்தித்தாள் விநியோகிப்பவர்.  சில மணிநேர உதவிக்கென்று சில பையன்களையும் வைத்துகொண்டு வீடுவீடாய் விநியோகம் செய்யும் இவர், மனைவி மகன் மகள் கொண்ட அன்புக் குடும்பத்தின் தலைவர்.  

நீங்க செய்யற இந்த வேலையைப் பத்தி?’

அருமையான வேலைங்க இது. அதிகாலையில எழுந்து கலக்சன் பாயிண்ட்டுக்கு போனா, நமக்கு வேண்டிய டைம்ஸ் ஆஃப் இந்தியா இத்தனை, ஹிந்து இத்தனை, தினத்தந்தி இத்தனை, தினமலர் இத்தனை, ஹிந்து தமிழ் இத்தனை, தினமணி இத்தனை, ஈநாடு, மாத்ருபூமி இத்தனைன்னு ஸ்லிப் போட்டு வச்சிருப்பாங்க டீலரோட ஆளுங்க. அத வாங்கி அப்படியே வேலைய ஆரம்பிக்கணும்.’

அப்புறம் என்ன செய்வீங்க?’

இந்த சப்ளிமென்ட்ங்க எல்லாத்தையும் மடிச்சி நாமதான் உள்ள வைக்கணும்.  ஒழுங்க மடிச்சி. பேப்பர்கள எடுத்து இந்த ரூட்டுக்கு இவ்வளோ அந்த ரூட்டுக்கு அவ்ளோன்னு பாத்து ஒழுங்கா அடுக்கிகிட்டா எல்லாம் தயார்.’

அப்புறம் என்ன செய்வீங்க?’

ரூட்டுக்கு போகவேண்டியதுதான்.  சில ரூட்ல நானே பேப்பர் போடுவேன், சில ரூட்டுகளுக்கு பையன்கள் வச்சிருக்கேன்.  யாரு வீட்ல எந்த பேப்பர்ன்னு தெளிவா விவரமா வச்சிருப்போம்.  போய் போட்டுட்டு வந்துட்டா முடிஞ்சிது

அப்புறம், என் ரூட்ட முடிச்சிட்டு பசங்க வரட்டும்ன்னு வெயிட் பண்ணுவேன். வந்ததும் கம்ப்ளைன்ட் ஏதாவது இருக்கான்னு பார்ப்பேன். இருந்தா ஒடனே அத பார்த்து சரி பண்ணுவேன். அவ்ளோதான், அன்னைக்கு வேலை முடிஞ்சிது.’

இது எல்லாம் எத்தனை மணிக்கு முடியும்?’

எட்டு எட்டரை ஆயிடும்ங்க

என் வீட்டுல டைம்ஸ், தினமணி, தமிழ் ஹிந்து, விகடன், குமுதம்ன்னு ரொம்ப வருஷமா போட்டுட்டு இருந்த பையன நான் நிறுத்தச் சொல்லிட்டேன். புதுசா வேறொரு பையன்கிட்ட போயிட்டேன். காரணம், அவன் ரொம்ப லேட்டா வந்தான். மக்களை பொறுத்தவரைக்கும் தான் லேட்டாக எழுந்தாலும் தனக்கு வர்ற பேப்பர் லேட்டா வரக்கூடாதுங்கறது பொதுவான மனப்பான்மை.  உங்க வேலையில சீக்கிரம் பேப்பர் போயி சேரனும் அப்படீங்கறது ஒரு முக்கிய விதி இல்லையா? அதுக்கு ரொம்ப சீக்கிரம் நீங்க எழணும், இல்லையா?  விடிய  காலையில் எப்ப எழுவீங்க?’

ரெண்டே முக்கால்!’

!’

முன்னாடி மூணு மூணேகால்ன்னு இருந்தது. ‘மலர்ச்சிகோர்ஸ்க்கு அப்புறம் நான் வேலையைப் பாக்கற விதம் மாறிடிச்சி. சரியா ரெண்டே முக்கால் முழிப்பு. எழுந்து கிளம்பி பாயிண்ட்டுக்குப் போயி வேலையை தொடங்கினா எல்லாம் முடிச்சிட்டு எட்டு எட்டரைக்கு வீட்டுக்கு வந்திடலாம்.   உங்க வீட்டுக்கு லேட்டா வந்தானே அந்த பையன், அத அந்த ஏஜன்ட்டுகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணனும் சார். மாசம் ஆனதும் ஒரு பில் எடுத்திட்டு வருவாங்க பாருங்க அதுல ஒரு நம்பர் இருக்கும். அவங்க கிட்ட சொல்லுங்க. உடனே சரி பண்ணிடுவாங்க.’

உங்க ரூட்ல அதிகம் விக்கற செய்தித்தாள் எது?’

ஹிந்து, அப்புறம் டைம்ஸ் ஆஃப் இண்டியா, தமிழ்ல டாப்பு தினத்தந்தி!’

உங்க வேலையில் இருக்கற கஷ்டம் என்ன?’

வேல புடிச்சி போன அப்புறம் கஷ்டம் எப்படிசார் இருக்கும்?’  (‘பொளேர்என அறைந்தது போல் இருக்கிறது. அப்படியே இருக்கிறேன் சில நொடிகள். அவரே தொடர்கிறார்)

தொடக்கத்தில நெறைய விஷயங்கள் பிடிபடல பரமன் சார். இப்ப கத்துகிறோம். அத கஷ்டம்ன்னு சொல்ல முடியாது.’

வாழ்க்கையை வேறு விதமாக பார்க்கலாம் என்ற ஒரு பெரும் விஷயத்தை தான் சொல்லுகிறோம் என்பது தெரியாமலேயே அவர் அடுத்த கேள்வி என்ன என்பது போல் நம்மை பார்க்கிறார்.  தாண்டி வருவதற்கு நமக்கு சில கணங்கள் தேவைப்பட்டது உண்மை.

இப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?’

வேற வேற வேலைங்க எல்லாம் பார்த்தேன் சார்.  ஒருத்தர் நம்மகிட்ட பணம் கடன் வாங்கியிருந்தார். மூன்றரை லட்சம் ரூபா, அப்போ பெரிய பணம் இல்லீங்களா அது. அவரால திருப்பித் தர முடியல. அவரு நெறைய வீடுகள்ல பேப்பர் போட்டுட்டுட்டு இருந்தாரு. ரொம்ப நாளா செய்தாரு. ரெண்டாயிரத்து ஐநூறு வீடு அவர்கிட்ட இருந்தது.  பணத்த திருப்பிக் குடுங்கன்னு கேக்க போனேன். ‘பணம் இல்லீங்க. வேணும்ன்னா என் வாடிக்கையாளர்கள்ல ஒரு ஆயிரம் வீடு தர்றேன். எடுத்துக்கோ இந்த தொழிலை எடுத்து நீ நடத்திக்கோ. அதான் என்னால பண்ண முடியும்!’ன்னு சொல்லிட்டாரு. நான் இறங்க வேண்டியதா போச்சிங்க!’

உங்களுக்கு இந்தத் தொழில் பற்றி ஏதாவது தெரியுமா அப்போ?’

ஒண்ணும் தெரியாது சார். கலக்சன் பாயின்ட், என்னென்ன பேப்பர் இருக்கு, தெனமும் நம்மள பாக்காத கஸ்டமரோட பார்வை எப்படி இருக்கும், நாம செய்ய வேண்டியது என்ன, எங்கயோ டைடல்பார்க்குல உட்கார்ந்துக்கிட்டு திருமங்கலத்தில இருக்கற வீட்டுக்கு டைம்ஸ் ஆஃப் இண்டியா வேணும்னு இன்டர்நெட்ல புக் பண்ணுவாங்க அத அவங்க வீட்ல போட்டுட்டு கூப்பன வாங்கி டீலர்கிட்ட குடுக்கணும்ங்கறது மாதிரி எதுவுமே தெரியாது சார். பேப்பர் பாக்கறவனா இருந்திருக்கேன். பேப்பர் போடறவனா என்ன செய்யணும்ன்னு எதுவுமே தெரியாது. அதவிட முக்கியம் அந்த ஆயிரம் வீடுகளுக்கும் ஒழுங்கா எல்லாம் நடந்திட்டு இருக்கு. திடீர்னு நாம மாறும்போது குளறுபடி வந்திடாம என்ன செய்யணும்எதுவும் தெரியாது.  புதுசுதானே ஒன்னும்தெரியாதே!’

இன்னைக்கு என்ன நிலைமை?’

தமிழ்ப் பேப்பர் இல்ல சார், இங்க்லீஷ் பேப்பர் இல்ல, மலையாளம்கோட்டயம்’ ‘மாத்ருபூமிஎந்த வீட்ல, தெலுங்கு பேப்பர்ஈநாடு’ ‘சாக்ஷிஎந்த வீடுன்னு கேட்ட கண்ண மூடிட்டு சொல்லுவேன். தூக்கத்துல எழுப்பி 626 ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வீடு என்ன பேப்பர்ன்னு கேட்டாஹிந்து, தினத்தந்தின்னு தூக்கத்திலேயே சொல்லுவேன் சார் இப்போ!’

துவக்கதில நிறைய புரியல சார். இப்பக் கூட டைம்ஸ் ஆஃப் இண்டியா கூப்பன் கொடுத்து பணம் வாங்கற விஷயம் ஒன்னுக்கு போராடிட்டு இருக்கேன். ஆனா கத்துக்கறேன் சார். எங்க அசோசியேஷன்ல சொல்றாங்கவந்து ரெண்டு வருஷத்தில இவ்ளோ தெளிவா இந்த அளவுக்கு நிக்கறது பெரிய விஷயம் இல்லை, மணி நீ கலக்கறேன்னு.’

சம்மந்தமே இல்லாத எதுவும் தெரியாத ஒரு வேலையில இறங்கி இன்னைக்கு இப்படி தெளிவா நிக்கறது எப்படி சாத்தியமாச்சி?’

பரமன் சார்வேற வழியில்ல சார் எனக்கு. வாழனும்! இதான் வழி இல்லைன்னா பணம் போச்சி.  அப்ப வேற என்ன செய்ய முடியும்? திரும்பிப் போக முடியாதே! எறங்கி ஒரு கை பாத்துதான் ஆகணும். அப்ப எல்லாமே வேற மாதிரி தெரியும், புரியும். நின்னுடலாம் சார்!’

ஃப்ரிட்ஜாஃப் நான்சென் அவர்களது வாக்கியத்தை வாய் முனுமுனுக்கிறது, ‘நான் கடந்துவந்த பாலங்களை இடித்து தீவைத்து எரித்து விடுவேன். வேறுவழியின்றி முன்னேறியே செல்ல வேண்டும்!’

 

: பரமன் பச்சைமுத்து

சென்னை

26.02.2017

Facebook.com/ParamanPage

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *