ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கேஉத்வேகம் தந்தவனே…

images.jpg

மனித ஆற்றலின் மகத்துவத்தை மாந்தர்க்குக் காட்டிய மின்னல் வீரனே

ஓடி ஓடி ஒரு தலைமுறைக்கே
உத்வேகம் தந்தவனே.

ஒவ்வொரு முறை உன் இயங்குதலைப் பார்க்கும் போதும், உன்னைப் பற்றிப் படிக்கும் போதும் உள்ளே உயிர்த்தெழுந்தேன் நான்.

இறுதி விளையாட்டில் நீ இடறி விழுந்த போது
இதயம் நின்றுபோய் எழுந்து நின்றோம் நாங்கள்

உன்னத வீரனே, போய் வா.
தொடர்பவனுக்குத் தோல்வியில்லை, வேறொரு வடிவில் வேறொரு களத்தில் வருவாய் வெல்வாய்!

வறுமையைத் துரத்த ஓடி
வாழ்வில் நீ புரிந்த சாதனைகளைப் பேசிக் கொண்டேயிருக்கும் உலகம்.

வாழ்க! வளர்க!

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *