அட…தாரை கருவி

ஊதல், தூம்பு, உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு, எக்காளம், குழல், கொம்பு, சங்கு, நமரி, நாதசுவரம், திருச்சின்னம், தாரை என பாரம்பரிய ஊது(காற்று) இசைக் கருவிகள் பற்றி பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு இன்று, ஈரோட்டில் நம் மாணவர்கள் லதா – ராமலிங்கம் – ராஜேஷ் இல்லத்திருமணத்தில் தாரை இசைக்கருவியை அருகிலிருந்து அனுபவிக்க முடிந்தது.”தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் பாக்கலியோ?’ என்று நீங்கள் கேட்டால், ”தாரை தப்பட்டை’யில் கேட்டோம்!’ என்பது என்பது என் பதில். தாரையை ராஜா பயன்படுத்தியிருந்தார். நாயகன் முழங்கை நீள கருவியை வைத்து ஊதுவார்.உண்மையான தாரை பன்னிரண்டு அடி நீளம் கொண்டது. வாய் வைத்து ஊதி இசைக்கும் போது அட்டகாசமாகப் பிளிறுகிறது.(பார்க்க – படம்)தாரை, மேளம், நாதசுவரம் என மங்கள இசையால் நிரம்பிருந்த ராஜேஷ் ராமலிங்கம் – சுவாதியின் மணவரங்கில், சாக்சஃபோனும் சேர்ந்திருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சி!பரமன் பச்சைமுத்துஈரோடு17.06.2018Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *