நீர் முடிச்சு : நல்ல தண்ணீராக்கி உயிர் நீராக்கும் வழி

‘வளர்ச்சி பத்திரிக்கைங்களா? நான்எத்திராஜ், வேளச்சேரியிலிருந்து. ஜூன் மாத இதழில் ‘நீர் முடிச்சு’ பற்றி எழுதியிருந்தீர்கள். தேற்றாங்கொட்டை, நன்னாரி, வெட்டி வேர் எல்லாவற்றிலும் எவ்வளவு போட்டு முடி போட வேண்டும்?

பரமன்: தேற்றாங்கொட்டை, நன்னாரி, வெட்டிவேர், மிளகு, ஜீரகம் ஒவ்வொன்றும் 10 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். எல்லாம் சேர்ந்தாலே கையளவு வரும். இவர் கை ஒரு நல்ல வெள்ளைத் துணியில் வைத்து மடித்து முடிச்சிட்டால், நீர் முடிச்சு தயார்.

உங்கள் தண்ணீர் குடத்தில் / தண்ணீர் கேனில் போட்டு விடுங்கள். நான்கு மணி நேரத்தில் அந்தத் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, உயிர் நீராக மாறியிருக்கும். அது உங்கள் உடலுக்கு நல்லது செய்யும்.

போகப் போக பழக்கத்தில் எது எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிய வரும். நன்னாரி அதிகம் சேர்த்தால் தொண்டையில் நீர் இறங்கும் போதே தெரிய வரும். அடுத்த முறை அளவு தெரியும்.

பார்க்க – படம்

#ValarchiTamilMonthly
#வளர்ச்சி

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
11.06.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *