பெரிய பழுவேட்டரையர் சரத்குமாருடன்…

wp-15830787348501990811816643332254.jpg

‘பொன்னியின் செல்வனுக்காக காத்திருக்கிறோம்! சுந்தர சோழனா உங்களை பாக்க!’

கைகளை பற்றிய படியே பதில் சொன்னார், ‘சுந்தர சோழரா பண்றது அமிதாப் பச்சன். நான் பெரிய பழுவேட்டரையர்!’

‘ஓ… ஆகா, பெரிய பழுவேட்டரையரா?! இன்னும் சிறப்பான வீரமான பாத்திரமாச்சே. நந்தினியின் கணவர் வேறு!’

‘ஆமா…ம், அதுக்காகத்தான் இவ்ளோ உடற்பயிற்சி!’

என் ஒரு கை அவரது வலக்கையைப் பற்றியிருக்க, என் இடக்கையால் அவரது இடக்கையின் வெளிப்புற கெண்டை சதையை (ட்ரைஸெப்ஸ்) தொட்டுச் சொன்னேன், ‘உங்களுக்கெல்லாம், உடற்பயிற்சி படத்துகாக பண்ற விஷயம் இல்லை. இல்லன்னாலும் பண்ணுவீங்க. உடற்பயிற்சிங்கறது உங்க பழக்கம்! இல்லையா!?’

கைகளில் இன்னும் இறுக்கம் கொடுத்து கண்ணைப் பார்த்து சிரிக்கிறார். விடை பெற்றுக் கொண்டு மலர்ச்சி மாணவர் எஸ்எஸ்எல்எஃப் சக்திவேலோடு சேர்ந்து வெளியேறுகிறார். நான் மேடையிலேயே அமர்ந்திருக்கிறேன், என் முன்னால் இரண்டு தளங்களிலும் அமர்ந்திருக்கும் ஆயிரம் பேரையும் பார்த்த படி லேடி ஆண்டாள் பள்ளியின் வளாகத்திலுள்ள அந்த பெரிய அரங்கினுள்.

அரசியலில் அவர் என்ன நிலை எடுக்கிறார் என்பதைத் தாண்டி, நடிகராக மிளிர உடலை எப்படிப் பராமரிக்கிறார் என்பதற்காகவே நடிகர் சரத்குமாரை நிறைய மதிப்பவன் நான். ‘வெறும் பத்து பாதாம், ஒரு இட்லி எல்லாம் எப்படி சார் காலை உணவுன்னு சாப்டறீங்க?’ என்று கேட்கலாமென இருந்தேன். ஒரே மேடையில் இருந்தாலும் இருவரும் நிகழ்ச்சியில் ஒன்றியிருந்ததால் தனிப்பட்ட முறையில் பேச சில நிமிடங்களே வாய்த்தன. கேட்க முடியவில்லை. அடுத்த முறை நிச்சயம் கேட்பேன்.

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை,
    01.03.2020

#ActorSarathKumar
#PonniyinSelvan
#PeriyaPazhuvettaraiyar
#ManiratnamFilm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *