குளித்து முடித்து நிற்கிறது மரம்

குளித்து முடித்து சொட்ட சொட்ட நிற்கிறது மரம்

குளிப்பாட்டிய மழையன்னை
வேறு எங்கோ சென்றுவிட

காற்றண்ணனோ
சூரிய அப்பனோ துவட்டிவிட வரட்டுமென
காத்திருக்கிறது மரம்

– பரமன் பச்சைமுத்து
சென்னை
19.07.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *