உயர்நீதி மன்றத்தின் நல்ல கேள்வி

‘சித்த மருத்துவ மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் பதவிக்கு தகுதியான சித்த மருத்துவர்கள் இருந்தும், ஏன் நியமிக்கவில்லை? அந்தப் பதவிக்கு ஆயுர்வேத மருத்துவம் படித்தவரை மத்திய அரசு நியமித்துள்ளது ஏன்? சித்த மருத்துவத் துறையில் இணை ஆலோசகர் என்ற ஒரு பதவியை ஏன் மத்திய அரசு இல்லாமல் செய்தது? ‘ என்ற உயர்நீதி மன்றத்தின் கேள்விகள் சரியானவை. 

‘தமிழகத்தில் மட்டுமே உள்ளது இம்மருத்துவம்!’ என்பது போன்ற காரணங்களால் குறைக்கப்படாமல், சித்த மருத்துவம் மட்டுமல்லாது  நாட்டின் எல்லா பாரம்பரிய  மருத்துவமும் உரிய  நல்ல இடம் நோக்கி நகர்த்த, இந்தக் கேள்விகள் உதவி புரியட்டும்.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
03.09.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *