வண்டலூர் ஏரி உயிர் பெறுகிறது

102 ஏக்கர் பரப்பளவுள்ள 100 ஏக்கர் விவசாயத்திற்கு பாசனம் தந்த வண்டலூர் ஏரி, பொது மக்கள் குப்பைகளை கொட்டி வந்ததாலும் வண்டலூர் ஊராட்சி குப்பையைக் கொட்டி எரித்ததாலும்(!!!) தனியார் ஆலைக்கழிவுகள் கொட்டப்பட்டதாலும் துர்ந்து 60 ஏக்கர் விவசாயப் பானத்திற்கு மட்டும் அளவிற்குச் சுருங்கிப் போனது.

இந்தியன் சுற்றுச்சூழல் அறக்கட்டளை என்ற தனியார் நற்சங்கம் இறங்கி வேலை செய்திருக்கிறது. 40 லட்டசம் செலவிட்டு ஏரியைப் புனரமைத்துக் காத்திருக்கிறார்கள். ஆழப்படுத்தி, இனி குப்பைகள் கொட்டா வண்ணம் உயரமான பாதுகாப்பு வேலிகள் அமைத்து, பறவைகளுக்காக ஏரி நடுவே மண் திட்டுகள் அமைத்து புனரமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

வண்டலூர் ஊராட்சியின் விவசாயம் காக்கப்படும்,  நிலத்தடி நீர் உயர்ந்து மண்ணின் உயிர்த்தன்மை ஓங்கும், அங்குள்ள புள்ளினங்களும் பூச்சிகளும் செழிக்கும், சூழலும் மீட்டெடுக்கப்படும். 

இந்த செயலை செய்த ‘இந்திய சுற்றுச் சூழல் அறக்கட்டளை’ அமைப்பிற்கும், அந்த அமைப்பிற்கு பொருளதவி செய்யும் அத்துனை பேருக்கும்… மலர்ச்சி வணக்கம்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
04.11.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *