முழுமலர்ச்சி Batch 49

இரண்டு தொலைபேசிக் கவுன்சிலிங்கள், பிசினஸ் பக்கம் கட்டுரை எழுதியது, ஒரு வழிகாட்டல் உதவி என்பதைத் தாண்டி வேறு சில கூடுதல் நிகழ்வுகளாலும் இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைந்தது.

இறைவனின் அருளால், முழுமலர்ச்சி திரள் 49 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது என்பது நல்ல நிகழ்வு. இரண்டாவது வகுப்பான இன்றே மனம் விட்டு வாய் விட்டழுது பகிர்வு கொண்டனர் தனியே ஆசிரியனிடம் இன்று. முழுமலர்ச்சியும் ஆழமாகியிருக்கிறது, எடுக்கும் ஆசிரியனும் இறையருளால் ஆழம் கொள்கிறான்.

இன்று அந்த சில மனிதர்கள் பாரம் இறக்கி வைக்கப்பட்டு, புதிய புரிதல் கொண்டு தெளிவு கொண்டு, நம்பிக்கையோடு ஆழ்ந்து கண்ணுறங்குவார்கள். மலர்ச்சிக்கு பெரும் நன்றிகள். நோய்த்தொற்றிலிருத்து உலகம் மீண்டு வரும் இவ்வேளையில் நம்பிக்கையோடு வகுப்பு வந்த இவர்கள் வாழ்வில் மீண்டு எழுந்து உயர்வார்கள். சிறப்பான வாழ்வை கொள்வார்கள்.

இறைவனின் தாளில் சரணம்.

  • பரமன் பச்சைமுத்து
    04.11.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *