சிவ வழிபாட்டு மாலை

wp-1609194706920.jpg

பதிப்புரை

சிவ ஆகமங்களின்படி பூசைகள் செய்த, செய்து கொடுத்த என் தந்தை மு. பச்சைமுத்து அவர்கள், எல்லா நிகழ்வுகளிலும் திருமுறைகள் ஓதினார், ஓதச் செய்தார், ஓதப்பட வேண்டுமென்று விரும்பினார்.

கோவில் குடமுழுக்கு, வேள்வி, வீட்டில் பூசை, இறப்பு என எல்லா நிகழ்வுகளுக்கும் சரியான  திருமுறை, பஞ்ச புராணப் பதிகங்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்த்தித் தருவார்.
அவர் ஆசைப்பட்டு செய்த அந்த திசையிலேயே, அதைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு, இனி செய்ய வருபவர்களுக்கு உதவி செய்வது அப்பாவின் அந்தப் பணியை தொடர்வதாக இருக்குமென்று நம்புகிறோம்.

அவர் தேர்வு செய்திருந்த பதிகங்களை ஒரு திரட்டாகத் தொகுத்து, ‘சிவ வழிபாட்டு மாலை’யாக அவரது முதலாமாண்டு நினைவு நாளில் (மார்கழி, மிருகசீரிடம்) (29.12.2020) வெளியிடுகிறோம்.

சிலருக்கு உதவியாய் இருக்குமென்று திருமுறைப் பதிகங்களோடே திருப்புகழ், சிவ அஷ்டோத்ரம் போன்றவற்றையும் சேர்த்துத் தந்திருக்கிறோம். சிறு நூலாகவும் எளிய நூலாகவும் இருக்க வேண்டுமென்பதால் விளக்கங்கள் சேர்க்காமல் வெறும் பதிகங்களை மட்டும் தந்திருக்கிறோம்.

வேள்வி புரிவோர், வேதியர், வீட்டில் வழிபடுவோர் என சிவனைத் தொழுவோர் எவர்க்கும் இவ்வெளிய நூல் உதவட்டுமென சிவனை வேண்டுகிறோம்.

சிவபுரம் சேர்ந்த எங்கள் தந்தை வாழ்த்தட்டும்,
தென்னாடுடைய சிவன் அருள் செய்யட்டும்!

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,

பரமன் பச்சைமுத்து
மு. பச்சைமுத்து அறக்கட்டளை
Paraman@Malarchi.com  

29.12.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *