கோதாவரி ஆற்றில் சிலீர் அனுபவம்

ஆந்திரா செழித்திருப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று. இந்தியாவின் இரண்டாவது நீண்ட ஆறான கோதாவரி.

தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்படங்களின் முக்கிய படபிடிப்புப் பகுதியான ராஜமுன்ட்றியில் கோதாவரியில் இறங்கி மார்கழி மாதத்தின் ஜஸ் நீரில் காலாற நிற்கும் வாய்ப்பை வாழ்க்கை தந்தது இன்று.

சாளுக்கிய மன்னன் ராஜ மகேந்திரன் ஆண்ட இடம் என்பதால் ‘ராஜமகேந்திரவரம்’ என்று அழைக்கப்பட்டு, ‘ராஜமகேந்திரி’ என மருவி, பிரித்தானியர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் அவர்களுக்கு அது வாயில் வராமல் ‘ராஜமுன்ட்றி’ ஆக்கிவிட்டார்கள்.

காக்கிநாடா விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கொஞ்சம் பிரிந்து உள்ளே பயணித்து கோதாவரியைக் காணப் போனோம்.

காலகாலமாய் ஓடிக்கொண்டிருக்கும், இப்படியொரு நீண்ட அகன்ற மிகப்பெரிய நதி என் காலையையும் தொட்டுச் செல்லுமென்றால், அந்த சிலீர் அனுபவத்திற்காக இப்படி பயணிக்கலாம்தானே!

– பரமன் பச்சைமுத்து
ராஜமுட்ன்றி,
04.01.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *