‘நூறு கண்கள்’ கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் ‘பிக்பாஸ்’

bigboss

bigboss

இத்தனை நாள்கள் இருந்து ஆக வேண்டும் என்ற குறிப்போடுதான் அனுப்பி வைக்கப்படுகிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா மனிதர்களையும் நாம் தேர்ந்தெடுக்க முடிவதில்லை. நாம் விரும்பும் வண்ணமே அவர்கள் அமைவதில்லை.

தவறை ஏற்றுக் கொள்ளாத ஆரவ்களையும் சக்திகளையும், தவறென்றாலே ‘தவறுதான் சார்… தவறுதான் சார்!’ என்று எல்லாத்தையும் ஏற்றுக்கொண்டு ஒரு முறை கூட உள்ளே உணராமல் வெளியே நடிக்கும்
ஜூலிகளையும் நம்மை சூழ்ந்திருக்க வைத்து ஒரு விளையாட்டை நிகழ்த்துகிறது வாழ்க்கை.

விளையாட்டை விளையாட்டாக மட்டுமே கருதி விளையாடுவது நன்றென்றாலும் விளையாட்டை நிஜமாக நினைத்து உணர்ச்சியில் ஊறுபவர்கள் தங்களையும் துயரத்திலாழ்த்தி சார்ந்தவர்களையும் துயரத்தில் தள்ளி விடுகிறார்கள். உடன் விளையாடும் மனிதர்களின் இரட்டை நிலையை ஏற்றுக் கொள்ள முடியா மனநிலை கொண்ட பரணிகளும் ஓவியாக்களும் பாவம் அல்பாயுசில் வீட்டை விட்டு வெளியேறி தங்களை முடித்துக் கொள்கிறார்கள்.

விளையாட்டை விளையாட்டு என்றே உணர்ந்து உணர்ச்சியால் உந்தப்பட்டும் சமநிலை பெற்று விளையாடுபவர்கள் விளையாடி முடித்து ‘வீடுபேறு’ பெறுகிறார்கள். ஒன்று நிச்சயம், ‘நூறு கண்கள்’ கொண்டு நம் ஆடும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் விளையாட்டை நிகழ்த்தி வைக்கும் ‘பிக்பாஸ்’.

– பரமன் பச்சைமுத்து
07.08.2017

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *