‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’

eating - Copy

கேள்வி: ‘வயிறு நிறைந்ததை வயிறே சொல்லும், முதல் ஏப்பம் உணர்த்தும்’ என்று ஒரு கல்லூரி விழாவில் நீங்கள் பேசியதை கேட்க நேரிட்டது. வயிறு நிறைந்து முதல் ஏப்பம் வருவதே தெரிவதில்லை எனக்கு. எனக்கென்ன வழி?

eating

பதில்: வயிறு நிறைந்ததும் ஒரு வித சமிக்ஞை செய்து ‘போதும்டா தம்பீ!’ என்று சொல்கிறது நம் வயிறு. அதுவே அந்த முதல் ஏப்பம். அதையும் தாண்டி கிலோக் கணக்கில் விழுங்கும் போது வயிற்றின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப் படுகிறது. செரிமானப் பிரச்சினைகள் மெல்ல மெல்ல தொடங்குகின்றன.

உடலை உடல் பற்றிய தன்மைகளை உடலின் வெளிப்பாடுகளைக் கவனியாமலே காரியங்களைச் செய்து பழகிப் போன நமக்கு அது வெளிப்படுத்தும் முதல் ஏப்பத்தை உணரமுடிவதில்லை.

வயிறு நிறைந்தது என்பதை வேறெப்படி உணர்வது? நாக்கு அதற்கு உதவி செய்யும். வயிறு பசியாக இருக்கும்போது உண்ணும் உணவின் சுவை அலாதியாக இருக்கும். வயிறு நிறைந்தால் அதே உணவு சுவையாக இருக்காது. அப்போது நிறுத்திவிடுங்கள். இதை தொடர்ந்து செய்ய செய்ய உங்களால் உங்கள் உடலின் வெளிப்பாடுகளை உணரமுடியும்.

 #வளர்ச்சி பதில்கள்

#Valarchi Tamil Monthly

http://www.paramanin.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *