பொதிகை முதல் அனுபவம்

அந்த மலர்ச்சி மாணவர்களைப் பொறுத்த வரை ‘ஒரு நாளு முழுக்க பரமன் கூடவே இருந்தோம், நெறைய்யா வயிறு வலிக்க சிரிச்சோம், ஒண்ணா சாப்டோம், நடுவுல ஒரு ப்ரோக்ராம் பண்ணோம்!’ ‘ஐ… நாங்கல்லாம், டிவியில வரப்போறோம்!’ என்பதான குதூகலங்கள்.

அந்தச் சானலின் தொழிட்நுட்ப நிர்வாகிகளுக்கு, ‘ச்சே… யப்பா! அய்யோ! நாங்க நிறைய்ய பேரை இந்த ஸ்டுடியோல பாத்திருக்கோம். ஒரு ரீடேக்கும் இல்லாம, ஒரு கரெக்‌ஷனும் இல்லாம, ஒரு தடவை ஏறி நின்னு ஏழு நாளுக்கான ஷூட்ட ஒரு செகண்ட் கூட வேஸ்ட் பண்ணாம அப்படியே தொடர்ச்சியா பேசி எப்படி முடிக்கிறாங்க இவங்க!’ ‘ சில செகண்ட்ஸ் முன்னாடி வரைக்கும் சிரிச்சிப் பேசி கூத்தடிச்சிட்டு இருந்தாங்க, பத்து செகண்ட்ஸ்ல பொறி பறக்குது எல்லாமே மாறுது!’ என்ற பிரமிப்பு ( அவர்களே சொன்னது இது!)

பொதிகை தொலைக்காட்சியில் நேற்றைய அனுபவங்கள் இவை.

என்னைப் பொறுத்த வரை முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது இந்த சானலில்.

மக்கள் தொலைக்காட்சியின் ‘அழகிய தமிழ் மகன்’னில் வந்த ஐந்து வாரங்களுக்கான நேர்காணல், கலைஞர் தொலைக்காட்சியில் பங்கேற்ற பிரபலங்களுடன் ஒரு சந்திப்பு, பிறகு மக்கள் தொலைக்காட்சியில் பங்கேற்ற விவாத மேடை என பங்கேற்ற எல்லாமும் சுத்தமான நேர்காணல்கள் அல்லது கருத்து விவாதங்கள். இடையிடையே வாழ்வியல் கருத்துக்களை வெளிப்படுத்த முயன்றேன். இப்போது பொதிகைத் தொலைக்காட்சியில் வருவது ஒரு வகையில் சிறப்பு மிக்கது. இங்கே நான் நானாக, ஆசிரியனாக இருக்கிறேன். வாழ்வியல் வகுப்பு எடுக்கிறேன். சில மலர்ச்சி மாணவர்களோடு பொதிகையின் அரங்கில் வாழ்வியல் பயிற்சியே எடுக்கிறேன். மலர்ச்சி உரை என்பது வெளிப்படும் நிகழ்ச்சி இது. வந்திருந்த மலர்ச்சி மாணவர்கள் நேற்று சொன்னது, ‘ஏழு வளர்ச்சிப் பாதை அட்டெண்ட் பண்ண மாதிரி இருந்தது பரமன்!’

‘பேரண்ட்டிங்னா… அப்படியே பேரண்டிங்க் பற்றி பேசறாரு. ஆன்மீகம்னா… அப்படியே பேசறாரு! ஒரு ப்ரிப்ரேஷனும் இல்ல. எட்டு நிமிஷமா முடிக்கறாரு, ரெண்டு நிமிஷமா… அதிலயும் முடிக்கறாரு! சார்… பிரமிப்பு சார் இவரு!’ இது பல கலைஞர்களைப் பார்த்து பழம் தின்று கொட்டை போட்ட நிலையத்தின் டெக்னீஷியன்கள் பேசிக்கொண்டது.

ஒரு நாளைக்கு பத்து நிமிடம் என்ற கணக்கில் தினம் காலையில் ஒளிபரப்ப திட்டமிடுகிறது பொதிகைத் தொலைக் காட்சி. வகுப்பில் அமர்ந்து கேட்குமனுபவம் வேறு, தொலைக்காட்சியில் பார்க்குமனுபவம் வேறு. எப்படி இருக்கிறதென்று பார்த்தே மேற்கொண்டு செய்ய வேண்டியதைப் பற்றி சிந்திக்கலாமென இருக்கிறேன்.

வெகு நாட்களாக விரும்பி வருந்தியழைக்கும் இரண்டு பெரிய தொலைக்காட்சி சானல்களின் பதிவிற்கு போகவே முடியவில்லை. எல்லாம் சரியாக இருந்தும் பதிவு நிகழ்வு அமையவேயில்லை. எங்கிருந்தோ திடீரென்று துவங்கிய பொதிகை அழைப்பு ஏழு எபிசோடுகள் பதிவாகி எடிட்டிங் வரை வந்துவிட்டது!

மலர்ச்சி மாணவர்கள் சிலர் போனோம், சிரித்துக் கூத்தடித்தோம், ஸ்டுடியோவில் ஏற்றினார்கள், அங்கேயும் அதகளம் செய்தோம், ‘சார்… ஆரம்பிக்கலாம்… ஸ்டார்ட்’ என்றார்கள், எழுபது நிமிடங்கள் எண்ணற்ற மலர்ச்சித் தருணங்கள் நிகழ்ந்தன. தொழில் நுட்ப கலைஞர்கள் தங்களை மறந்து வகுப்பில் திளைத்து கைதட்டினார்கள், ரசித்து ‘உச்’ கொட்டினார்கள், சிலர் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். ‘முடிந்தது’ என்றார்கள், திரும்பவும் சிரித்தோம்.

நிகழ்ச்சி முடித்து மேடையிலிருந்து இறங்கியதும்,
தமிழே தெரியாத பீகாரைச் சேர்ந்த ஸ்டுடியோ சீனியர் லைட்டிங் டெக்னீஷியன் ஓடி வந்து சொன்னார், ‘சார்… யுவர் பாடி லாங்க்வேஜ், ஹேண்டு ஸ்டைல்… யூ லுக் லைக் ரஜினி காந்த் சார்!’

‘ஹாஹ்ஹாஹ்ஹா! டுடே ஈஸ் ரஜினீஸ் பர்த்டே!’

– பரமன் பச்சைமுத்து
13.12.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *