நான் ஒரு எழுத்தாளனா என்பதில் இன்னும் சந்தேகம் உண்டெனக்கு.

நான் ஒரு எழுத்தாளனா என்பதில் இன்னும் சந்தேகம் உண்டெனக்கு. ஆனால், எழுத உட்காரும் போது மெள்ள மெள்ள எழுத்து என்னை ஆட்கொள்வதும் அந்த வேறோர் உணர்வில் மூழ்கிப் போவதும் பிடிக்குமெனக்கு. அதில் காலக்கணக்கு இல்லை. கடிகாரங்கள் இல்லை. உள்ளே போய் திரும்ப வெளியே வருவதில் நிமிடங்கள் கடந்து போயிருக்கும், மணி கரைந்து போயிருக்கும்.

இன்று தினமலரின் ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்’ தொடருக்காக அமர்ந்ததில் நாளே கரைந்து போய் விட்டது. அடுத்த இரண்டு வாரங்களை முடித்து கொடுத்தாயிற்று. பத்தொன்பது மாவட்டத்தின் வாசகர்களுக்கு என்னவாகிறது என்பது அப்புறம். எழுதும் போது எனக் கு என்னவோ நடக்கிறது. அது பிடிக்கிறது. கண்ணுக்கு முன்னிருக்கும் உலகம் மறைந்து வேறொன்றில் அமிழ்ந்து ஆழ்ந்து கரைந்து போகும் அது உன்னதமாக இருக்கிறது. பிடித்திருக்கிறது இது.

பரமன் பச்சைமுத்து
21.01.2018
சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *