இலங்கையின் நெல் வயல்கள்

நீர் வளம் மிகுந்த இலங்கையின் நெல் வயல்கள்.

நெல் வயல்களில் எருவிட்டு உழுது ( இதன் பெயர் ‘புழுதி ஏர்), நீர் பாய்ச்சி ஊற வைத்து திரும்பவும் ஏர் உழுது சேறாக்கி மட்டப் பலகையை வைத்து சேற்றை ஒரே சீராக்கும் பழக்கம் சோழ தேசத்தில் இன்றும் உண்டு. ‘பறம்படித்தல்’ என்று பெயர் அதற்கு. காவிரி பொய்க்காத அக்காலங்களில் மணக்குடியில் எங்கள் வயல்களில் பறம்படிப்பது நடந்தது. அதை இங்கே இலங்கை வயல்களில் பார்க்க முடிகிறது.

நம்மூரின் மண்வெட்டிகள் குட்டையான காம்பைக் கொண்டிருக்கும். குனிந்த நிலையிலேயே மண்ணை வெட்ட முடியும். மண்வெட்டியை படுக்க வாட்டில் வைத்து இழுத்து சேறை சீராக மட்டப்படுத்த முடியும். இங்கேயும் மண்வெட்டிகள் அதே பணிகளுக்கே பயன்படுத்தப் படுகின்றன என்றாலும் மண்வெட்டி காம்பு வெகு வெகு நீளம். இதனால் நின்ற நிலையிலேயே இயங்க முடிகிறது.

கதிர்காமத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்கையில் பதிவு செய்தது.

பார்க்க – காணொளி

நெல் வயல் – உழவர்கள்

: பரமன் பச்சைமுத்து,
கதிர்காமம், இலங்கை,
18.05.2018

Facebook.com/ParamanPage

#ParamanInSriLanka

https://m.facebook.com/story.php?story_fbid=2132537076966548&id=1587660084787586

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *