யோகப் பயிற்சிகளை உலகிற்குப் போதிக்கும் யாவரும் – வாழ்க!

தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கேயுரிய உள்ளத்து நல்லுணர்ச்சி, அடுத்தவருக்கு விளக்கவே முடியாத ஓர் அலாதியானது.தசைகளை உறுதியாக்கும் எடை தூக்கும் பயிற்சி, இதயத்தை நுரையீரலை சீர் செய்யும் ஓட்டப் பயிற்சி, நடைப்பயிற்சி, கருவிகள் எதுவுமின்றி தரையில் செய்யக்கூடிய சிறு சிறு தடகளப் பயிற்சிகள் என சில வகைப் பயிற்சிகளை எனக்கானத் தொகுதிகளாகப் பிரித்து மாற்றி மாற்றி பயிற்சி செய்பவன் நான்.உடல் வடிவம், உடலுறுதி என ஒவ்வொன்றும் ஒன்றைத் தந்த போதும்,் யோகப் பயிற்சிக்குப் பின்னே கிடைக்கும் ஓர் அதியற்புத அலாதியான உள்ளத்து நிலை வேறெதிலும் வருவதில்லை என்பது அனுபவத்தில் நான் கண்ட திண்ணம்.அந்த அனுபவதிற்காகவே யோகப் பயிற்சி செய்கிறேன்.யோகப் பயிற்சிகளை உலகிற்குப் போதிக்கும் யாவரும் – வாழ்க!வாழ்க! வளர்க!- பரமன் பச்சைமுத்துசென்னை21.01.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *