ராமசாணிக்குப்பம் பள்ளிக்கு பாராட்டுகள்

அரசுப் பள்ளி மாணவர்களால் ஒரு சிறு காடு உருவாக்கப்பட்டு பல்லுயிர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டது என்றால் பாராட்டுவீர்கள்தானே!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி வியப்பிலாழ்த்துகிறது.

பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு நில்லாமல் பானைகளையும், மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றப் பயன்படும் போத்தல்களையும் நீள்குழல்களையும் வைத்துக் கொண்டு சொட்டுநீர் பாசன முறையில் செடிகள் வளர்க்கத் தொடங்கி பள்ளியின் பின்புறம் ஒரு காட்டையே வளர்த்து எடுத்திருக்கிறார்கள். அந்தப் பள்ளியில் வளர்ந்த மாணவனால் இனி உலகை வேறு நல்ல விதமாகவே பார்க்க முடியும். அந்த ஆசிரியர்களுக்கு என் பிரார்த்தனைகள். அந்த மாணவர்களுக்கு என் வாழ்த்துகள்.

கேள்விப்பட்டதும் உடனே நேரில் சென்று மரியாதை செய்து உற்சாகம் தந்த மாவட்ட ஆணையர் கந்தசாமி அவர்களுக்கு வணக்கங்கள்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
01.08.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *