நன்றாக இருக்கிறது திரும்பிப் பார்க்க

‘திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன் நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. ‘மகளிர் தின விழா’வில் பேச வந்திருந்தார் பரமன் பச்சைமுத்து அவர்கள்.

உடன் பணிபுரிந்த பெண் ஒருவர் பரமனிடமே ‘பரமன், எப்ப நான் உன்னை சேல்ஸ்ல ஜெயிக்க முடியும்?’னு கேட்டாராம். ‘நீ முடிவு பண்ற அன்னைக்கு!’ என்று பரமன் பதில் சொன்னாராம். இது நிகழ்ச்சியில் அவர் பேசிய போது குறிப்பிட்டது. நிகழ்ச்சி முடிந்து கேள்வி பதிலில் நான் கேட்டேன், ‘பரமன் சார், அந்தப் பொண்ணு உங்களை ஜெயிச்சாங்களா?’ அதற்கு பரமன் ஐயா சொன்ன பதில், ‘இந்த பொண்ணு நம்மள ஜெயிக்க முடியாத அளவு நான் ஜெயிப்பேன்னு் முடிவு பண்ணிட்டேன்’.

….

ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவும் ஆனந்தம் அறக்கட்டளையின் மாணவர்களுக்காக வாழ்வியல் பயிற்சி எடுக்க சென்னை இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி சென்றிருந்தேன். மலர்ச்சி உரை முடித்து விட்டு ஜீனியர் விகடன் ஆசிரியர், பத்திரிக்கையாளர் தமிழ் மகனோடு அளவளாவிக் கொண்டிருந்த போது, மேற்கண்டதை ஒரு மாணவி பகிர… எனக்கு ஏற்பட்டது இன்ப அதிர்ச்சி.

திருவண்ணாமலை அரசுக்கல்லூரிக்கு பேராசியர் டாக்டர். ரவியின் அழைப்பின் பேரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மலர்ச்சி உரையாற்றப் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் பயனடைந்த ஒரு மாணவி இன்று ஆனந்தம் அறக்கட்டளையின் வாலண்ட்டியராக இருப்பார், இன்றைய மலர்ச்சி உரையில் பங்கேற்பார் என்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! அன்று பேசியதை அப்படியே நினைவில் வைத்திருந்து சொல்லுவார் என்பது நினைத்தே பாராதது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பேராசிரியர் ரவி பெருமகிழ்ச்சியடைவார்.

நன்றாக இருக்கிறது திரும்பிப் பார்க்க!.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
27.09.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *