தண்ணீர் தேங்கி நின்றால்

தண்ணீர் தேங்கி நிற்கிறதென்றும் சூழலை ஒழுங்காக வைத்திருக்கவில்லையென்பதாலும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறது ஒரு பள்ளிக்கு.

‘தண்ணீர் தேங்கியுள்ளது’ என்று சென்ற ஆண்டு இப்படி டெங்கு அபராதங்கள் விதித்த சில நாட்களில் மழை வந்து ஊரே தண்ணீர்க்காடாகி கிடந்தது, ‘உங்களுக்கு யாரு இப்ப அபராதம் போடறது?’ என்று மக்கள் நினைக்கும் படியானது.

அபராதம் விதித்த அடுத்த நாளில், இதோ தொடங்குகிறது வடகிழக்குப் பருவ மழை, ஊரெல்லாம் தண்ணீர் நிற்கவே செய்யும். அபராதம் போடுவது நெடுநாளைய தீர்வாக இருக்காது. வேறு ஏதோ செய்ய வேண்டும் அதிகாரிகளும் நாமும்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
17.10.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *